'கோடை வெப்பம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துக'

'கோடை வெப்பம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துக'

1 mins read

சென்னை: கோடை வெப்­பம் தொடர்­பாக பொது­மக்­கள் மத்­தி­யில் போதிய விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்த வேண்­டும் என தமி­ழக அர­சின் தலை­மைச் செய­லா­ளர் இறை­யன்பு அதி­கா­ரி­க­ளுக்கு அறி­வு­றுத்தி உள்­ளார்.

கோடை வெப்­பத்­தில் இருந்து மக்­களைப் பாது­காக்க நட­வடிக்கை எடுக்க வேண்­டும் என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

நேற்று முன்­தி­னம் பல்­வேறு அர­சுத்­துறை செய­லா­ளர்­க­ளுடன் ஆலோ­சனை மேற்­கொண்ட அவர், மேலும் பல அறி­வு­ரை­களை வழங்­கி­னார். உட­லில் நீர்ச்­சத்து குறை­யா­மல் பரா­ம­ரிக்க, தேவை­யான அளவு தண்­ணீர் குடிக்க வேண்­டும் என்­றும் அவ­சி­ய­மான பணி­க­ளுக்கு வீட்டை விட்டு வெளியே செல்­லும்­போது குடி­நீரை கையு­டன் எடுத்­துச் செல்ல வேண்­டும் என்­றும் ஆலோ­ச­னைக் கூட்­டத்­தில் பங்­கேற்ற வரு­வாய்த் துறை ஆணை­யர் பிர­பா­கர் கூறி­னார்.

மதிய வேளை­யில் வெளியே செல்­ப­வர்­கள் குடை­களை எடுத்­துச் செல்ல வேண்­டும் என்­றும் மதி­யம் 12 முதல் 3 மணி வரை வெளியே செல்­வதை குழந்­தை­கள், கர்ப்­பி­ணி­கள், முதி­ய­வர்­கள் தவிர்க்க வேண்­டும் என்­றும் அவர் மேலும் குறிப்­பிட்­டார்.

இதற்­கி­டையே, தமி­ழ­கத்­தின் பல்­வேறு மாவட்­டங்­களில் அன்­றாட வெப்­ப­நிலை தொடர்ந்து 37.7 டிகி­ரி செல்சியசாக பதி­வாகி வரு­வதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.