விமான நிலையத்தில் துப்பாக்கிக் குண்டு பறிமுதல்

1 mins read

சென்னை: பயணி ஒரு­வ­ரி­டம் இருந்து துப்­பாக்கிக் குண்டு பறி­மு­தல் செய்­யப்­பட்­டதை அடுத்து, சென்னை விமான நிலை­யத்­தில் பர­ப­ரப்பு நில­வி­யது.

நேற்று முன்­தி­னம் சென்­னை­யில் இருந்து திருச்சி செல்­ல­இருந்த பய­ணி­கள் அனை­வ­ரும் வழக்­க­மான பாது­காப்பு சோத­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

அப்­போது அக்­கு­றிப்­பிட்ட பய­ணி­யின் உடை­மை­க­ளைச் சோத­னை­யிட்­ட­போது எச்­ச­ரிக்கை மணி ஒலித்­தது. இதை­ய­டுத்து, அவ­ரது பெட்­டி­க­ளைப் பாது­காப்பு அதி­கா­ரி­கள் திறந்து சோத­னை­யிட்­ட­னர்.

அப்­போது ஒரு பெட்­டி­யில் துப்­பாக்கிக் குண்டு இருப்­பது கண்டு பிடிக்­கப்­பட்­டது. இத­னால் பர­ப­ரப்பு ஏற்­பட்ட போதி­லும், அவ­ரி­டம் நடத்­தப்­பட்ட விசா­ர­ண­யின்­போது அவர் துப்­பாக்கி வைத்துக்கொள்­வதற்­­கான உரி­மம் பெற்­ற­வர் என்­பது தெரி­ய­வந்­தது.

இதை­ய­டுத்து, விசா­ர­ணைக்­குப் பின்­னர் அப்­ப­யணி விடு­விக்­கப்­பட்­டார்.