ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு உயர் நீதிமன்றம் தடை

ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு உயர் நீதிமன்றம் தடை

1 mins read

சென்னை: ஊட்­டி­யில் செயல்­படுத்­தப்­பட இருந்த ஹெலி­காப்­டர் சுற்­றுலாத் திட்­டத்­துக்கு உயர் நீதி­மன்­றம் தடை விதித்­துள்­ளது.

இத்­திட்­டத்­தால் வன உயி­ரி­னங்­க­ளுக்குப் பாதிப்பு ஏற்­படும் என்­ப­தால் தடை விதிக்­கப்­ப­டு­வ­தாக நீதி­மன்­றம் தெரி­வித்­தது.

கோடை விடு­மு­றைக் காலத்­தில் ஏரா­ள­மான சுற்­று­லாப் பய­ணி­கள் ஊட்­டிக்கு வருகை தரு­வர் என்­பதை மன­திற்­கொண்டு இத்­திட்­டத்­தைச் செயல்­ப­டுத்த நீல­கிரி மாவட்ட நிர்­வா­கம் உரிய ஏற்­பா­டு­க­ளைச் செய்­தி­ருந்­தது.

எனி­னும் இதற்கு எதிர்ப்பு தெரி­வித்து முரு­க­வேல் என்­ப­வர் வழக்கு தொடுத்­தி­ருந்­தார்.

"ஹெலி­காப்­டர் சத்­தத்­தால் வன­வி­லங்­கு­கள் மிர­ளும். அவற்­றின் இயல்பு வாழ்க்கை பாதிக்­கப்­படும். எனவே இத்­திட்­டத்­துக்­குத் தடை­வி­திக்க வேண்­டும்," என்று அவர் கோரி இருந்­தார்.

இதை­ய­டுத்து உயர் நீதி­மன்­றம் ஹெலி­காப்­டர் சுற்றுலா வுக்குத் தடை விதித்­துள்­ளது.