சிவகங்கை: திடீரென்று வீசிய சூறாவளிக் காற்றில் சிக்கி சிவகங்கை மாவட்டத்தில் ஆறு கிராமங்கள் பாதிக்கப்பட்டன.
நான்கு வீடுகள் பெரிதும் சேதமடைந்த நிலையில், ஐம்பதுக்கும் மேற்பட்ட மரங் கள் வேரோடு சாய்ந்தன. வியாழக்கிழமை மாலை சூறாவளிக் காற்று வீசியது.
அப்போது சாத்தனி, உடவயல், விட்டனேரி, குருக்கத்தி ஆகிய கிரா மங்களில் நான்கு வீடுகளின் மேற்கூரைகள் சேதமடைந் தன. சில மரங்கள் மின்கம்பி களில் சாய்ந்ததால் மின் தடை ஏற்பட்டது.

