மகன்களின் கண்முன்னே வெட்டிச் சாய்க்கப்பட்ட பிரபல ரவுடி

மகன்களின் கண்முன்னே வெட்டிச் சாய்க்கப்பட்ட பிரபல ரவுடி

1 mins read

சென்னை: மகன்­க­ளின் கண்­முன்னே பிர­பல ரவுடி வெட்­டிக் கொல்­லப்­பட்­டதை அடுத்­து சென்­னை­யின் ஆதம்­பாக்­கம் பகு­தி­யில் பதற்­றம் நில­வி­யது.

அப்­ப­கு­தி­யைச் சேர்ந்த 40 வயதான சீனி­வா­சன் மீது கொலை, மிரட்­டல் உள்­ளிட்ட பல்­வேறு வழக்­கு­கள் நிலு­வையில் உள்­ளன.

நேற்று முன்­தி­னம் தன் வீட்­டுக்கு அருகே உள்ள உற­வி­னர் வீட்டு துக்க நிகழ்­வுக்குச் சென்று திரும்­பிய அவர், வீட்­டுக்கு வெளியே நாற்­கா­லி­யில் அமர்ந்து பேசிக்­கொண்டு இருந்­தார். அப்­போது திடீ­ரென்று இரு­சக்­கர வாக­னங்­களில் வந்த 8 பேர் கண்­ணி­மைக்­கும் நேரத்­தில் சீனி­வா­சன் மீது தாக்­கு­தல் நடத்­தி­னர்.

அரி­வாள், கத்தி உள்­ளிட்ட பயங்­கர ஆயு­தங்­க­ளால் சர­மா­ரி­யாக வெட்­டப்­பட்­ட­தில் தலை­யில் பலத்த காய­ம­டைந்த சீனி­வா­சன் சம்­பவ இடத்­தி­லேயே ரத்த வெள்­ளத்­தில் பரி­தா­ப­மாக இறந்­தார்.

தந்தை மீது நடத்­தப்­பட்ட தாக்கு­தலைத் தடுக்க முற்­பட்ட சீனி­வா­ச­னின் இரு மகன்­களில் இளை­ய­வ­ரான 15 வயது பிர­தாப்­புக்­கும் வலது கையில் வெட்டு விழுந்­தது. மகன்­கள் கண் எதி­ரேயே சீனி­வா­சனை வெட்­டிக்­கொன்­று­விட்டு அந்தக் ­கும்­பல் அங்­கி­ருந்து தப்­பிச்­சென்­று­விட்டது. இச்­சம்­ப­வம் தொடர்­பாக காவல்­துறை வழக்­குப்­ப­திவு செய்து தீவிர விசா­ரணை மேற்­கொண்­டுள்­ளது.

இரு கொலைச் சம்­ப­வங்­கள் தொடர்­பாக சீனி­வா­ச­னுக்­கும் மற்­றொரு கும்­ப­லுக்­கும் இடையே நிலவி வந்த முன்­பகை கார­ண­மாக அவர் கொடூரமாகக் கொல்­லப்­பட்­டி­ருக்­க­லாம் எனக் கரு­தப்­படு­கிறது.