மா.சுப்பிரமணியன்: நீட் தேர்வு எழுதிய 147,000 மாணவர்களுக்கு மனநல ஆலோசனை

மா.சுப்பிரமணியன்: நீட் தேர்வு எழுதிய 147,000 மாணவர்களுக்கு மனநல ஆலோசனை

1 mins read

சென்னை: மருத்­து­வப் படிப்­புக்­கான 'நீட்' நுழை­வுத் தேர்வு எழுதி மன அழுத்­தம் ஏற்­பட்ட மாண­வர்­க­ளுக்­கும் அவர்­க­ளின் பெற்­றோர்­க­ளுக்­கும் மன­நல ஆலோ­சனை வழங்­கு­வது நீடிக்­கும் என மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­துள்­ளார்.

சென்­னை­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், இந்த நட­வ­டிக்­கை­யா­னது 2020-21இல் தொடங்­கப்­பட்­டது என்­றும் 'நீட்' தேர்வு எழு­திய மாண­வர்­க­ளுக்கு எதிர்­மறை எண்­ணங்­கள் ஏற்­ப­டு­வதைத் தவிர்க்­கும் வகை­யில் தொடர்ந்து ஆலோ­ச­னை­கள் வழங்­கப்­பட்டு வரு­கிறது என்­றும் குறிப்­பிட்­டார்.

நடப்­பாண்­டில் ஏறத்­தாழ 147,000 மாணவ, மாண­வி­யர்க்கு மன­நல ஆலோ­சனை வழங்­கும் பணி தொடங்­கப்­பட்­டுள்­ள­தா­கக் குறிப்­பிட்ட அவர், 24 மணி நேர­மும் இந்­தப் பணி நடை­பெ­றும் என்­றார்.

மேலும் 12ஆம் வகுப்­புக்­கான பொதுத்­தேர்­வில் தேர்ச்சி பெறாத 46,932 மாணவ, மாண­வி­யர்க்கு மன­நல ஆலோ­ச­னை­கள் வழங்­கப்­ப­டு­கின்றன என்­றும் அமைச்­சர் கூறி­னார்.

"நீட் தேர்­வில் இருந்து தமி­ழ­கத்­துக்கு விலக்கு பெறு­வ­தற்­கான தொடர் முயற்­சி­களை தமி­ழக அரசு மேற்­கொண்டு வரு­கிறது.

"கடந்த மார்ச் 27ஆம் தேதி தமி­ழ­கத்­துக்கு ஆயுஷ் அமைச்­ச­கத்­தில் இருந்து நீட் தேர்வு விலக்கு தொடர்­பாக கேள்­வி­கள் அடங்­கிய குறிப்­பாணை வந்­தது. "அந்­தக் கேள்­வி­க­ளுக்கு கடந்த 10ஆம் தேதி சட்­டத்­துறை மூலம் பதில் அளிக்­கப்­பட்டு, உள்­துறை அமைச்­சுக்கு அனுப்பப்­பட்­டுள்­ளது," என்று அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­துள்­ளார்.

நீட் தேர்­வில் விலக்கு பெறு­வ­தற்­கான முயற்சி இன்­னும் உயிர்ப்­பு­டன்­தான் இருக்­கிறது என்­றும் ஜல்­லிக்­கட்­டுக்குத் தடை நீங்­கி­ய­து­போல, நீட் தேர்­வுக்­கும் விலக்கு கிடைக்­கும் என்ற நம்­பிக்கை உள்­ளது என்­றும் அவர் மேலும் கூறி­னார்.