சுகாதாரமற்ற குடிநீர் கேன்கள் பறிமுதல்: அரசு நடவடிக்கை

சுகாதாரமற்ற குடிநீர் கேன்கள் பறிமுதல்: அரசு நடவடிக்கை

2 mins read

சென்னையில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

சென்னை: தனி­யார் நிறு­வ­னங்­கள் விநி­யோ­கிக்­கும் குடி­நீர் கேன்­கள் தர­மற்று இருப்­ப­தாக எழுந்­துள்ள புகார்­களை அடுத்து சென்­னை­யில் அதி­கா­ரி­கள் அதி­ரடி சோதனை நட­வ­டிக்கை மேற்­கொண்­ட­னர்.

அப்­போது தர­மற்ற கேன்­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­ட­து­டன், அவற்றைத் தயா­ரித்து விநி­யோ­கித்த நிறு­வ­னங்­கள், வியா­பா­ரி­க­ளுக்­குக் கடும் எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டது.

நேற்று சென்னை திரு­வொற்­றி­யூர், ராய­பு­ரம் உள்­ளிட்ட பகு­தி­களில் இயங்கி வரும் தனி­யார் குடி­நீர் சுத்­தி­க­ரிப்பு நிலை­யங்­களில் உண­வுப்­பொ­ருள் பாது­காப்புப் பிரிவு ஆணை­யர் லால்­வீனா தலை­மை­யி­லான அதி­கா­ரி­கள் சோதனை நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­ட­னர்.

அப்­போது ஏரா­ள­மான குடி­நீர் கேன்­கள்­ சு­கா­தா­ர­மற்ற நிலை­யில் இருப்­பது தெரி­ய­வந்­தது. அவற்றை முறை­யா­கச் சுத்­தப்­படுத்­தா­ம­லேயே மீண்­டும் குடி­நீரை நிரப்பி விநி­யோ­கிக்­கத் திட்­ட­மிட்­டி­ருந்­த­தை­யும் அதி­கா­ரி­கள் அறிந்­த­னர்.

மேலும், கேன்­களில் அடைக்­கப்­படும் குடி­நீ­ரும் தர­மற்று இருப்­ப­தைக் கண்டு அதி­கா­ரி­கள் குழு கடும் அதிர்ச்சி அடைந்­தது.

உட­ன­டி­யாக அந்­தக் கேன்­களைப் பறி­மு­தல் செய்ய ஆணை­யர் லால்­வீனா உத்­த­ர­விட்­டார்.

அதை­ய­டுத்து, தனி­யார் குடி­நீர் சுத்­தி­க­ரிப்பு நிலை­யங்­க­ளுக்­கான உரி­மம், கட்­ட­மைப்பு வச­தி­களை அதி­கா­ரி­கள் ஆய்வு செய்­த­னர். மேலும் அந்­நி­லை­ய­ங்­களில் பணி­யாற்­றும் ஊழி­யர்­க­ளுக்கு, எவ்­வாறு சுகா­தா­ர­மான முறை­யில் குடி­நீர் கேன்­களை விநி­யோ­கிக்க வேண்­டும் என்­ப­தற்­கான நடை­முறை­கள் தெரி­யுமா என்று அதி­கா­ரி­கள் விசா­ரித்து அறிந்­த­னர்.

இதை­ய­டுத்து குடி­நீர் கேன்­களை விற்­பனை செய்­யும் கடை­க­ளி­லும் அதி­கா­ரி­கள் குழு ஆய்வு மேற்­கொண்­டது.

அப்­போது ஐஎஸ்ஐ தர முத்­திரை இல்­லாத கேன்­கள், சுகா­தா­ர­மற்ற நிலை­யில் உள்ள குடி­நீர் கேன்­களை விற்­பனை செய்த கடைக்­கா­ரர்­க­ளுக்கு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டது.

கோடை காலம் என்­ப­தால் சென்­னை­யில் குடி­நீர் கேன்­களுக்குத் தட்­டுப்­பாடு நில­வு­கிறது. இதைப் பயன்­ப­டுத்தி பல்­வேறு முறை­கே­டு­கள் நடப்­ப­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.