ஈரோடு: போதை ஊசி, மாத்திரை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி கூறினார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அம்மாவட்டத்தில் போதை மாத்திரைகளை விற்றதாக காவல்துறை ஏழு பேரை கைது செய்துள்ளதாகக் குறிப்பிட்டாரா்.
"தமிழகம் முழுவதும் போதை ஊசி, மாத்திரை பயன்படுத்துவது, கள்ளச்சாராயம் காய்ச்சும் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதல்வரும் காவல்துறை தலைவரும் அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளனர்.
"்போதை மாத்திரைகள் விற்பனை செய்பவர்களைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் யாருக்கும் துணையாக இல்லை," என்றார் அமைச்சர் முத்துசாமி.

