சிவகங்கை: ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தடை இல்லை என உச்ச நீதிமன்றம் அறிவித்ததை அடுத்து தமிழகத்தில் கொண்டாட்டச் சூழல் நிலவுகிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் வரவேற்று கொண்டாடி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் இது கோடைகாலம் என்பதால் சர்பத், மோர் போன்ற பானங்களைப் பொதுமக்களுக்கு வழங்கினர்.
மேலும் ரோஜா பூக்கள், செடி கன்றுகளையும் விநியோகித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மேலும், சாலையில் நடந்து சென்றவர்களுக்கு மட்டுமல்லாமல் பேருந்து, வாகனங்களில் சென்றவர்களுக்கும் அவை வழங்கப்பட்டன.
"இனி எந்தவிதமான தடைகளும் சிக்கல்களும் இன்றி ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த இயலும்.
"தமிழர்களின் பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் வகையில் ஜல்லிக்கட்டு நடைபெறும்," என ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

