1.25 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

1.25 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

1 mins read

சென்னை: கத்­தார், துபாய், இலங்கை­யில் இருந்து கடத்தி வரப்­பட்ட ரூ.2.27 கோடி மதிப்­புள்ள தங்­கம் சென்னை விமான நிலைய சுங்க அதி­கா­ரி­க­ளால் பறி­மு­தல் செய்­யப்­பட்­டது.

மொத்­தம் 1.25 கிலோ தங்­கம் பறி­மு­தல் செய்­யப்­பட்­டுள்­ளது என்­றும் இது தொடர்­பாக இலங்­கை­யைச் சேர்ந்த இரு பெண்­கள் உட்பட மொத்­தம் எட்டு பேர் கைதாகி உள்­ள­னர் என்­றும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். கைதா­ன­வர்­க­ளி­டம் தீவிர விசா­ரணை நடத்­தப்­பட்டு வரு­கிறது.

அண்­மைக்­கா­ல­மாக தமி­ழக விமான நிலை­யங்­களில் கடத்­தல் தங்­கம் தொடர்ந்து பறி­மு­தல் செய்­யப்­பட்டு வரு­கிறது.

இது தொடர்­பாக தொடர்ந்து பலர் கைதானபோதி­லும் தங்கக் கடத்­தல் குறை­ய­வில்லை என்கிறார்­கள் விமான நிலைய சுங்கத்­துறை அதி­கா­ரி­கள்.