'தனித்துவமான மாநில கல்விக்கொள்கை வகுப்போம்'

'தனித்துவமான மாநில கல்விக்கொள்கை வகுப்போம்'

2 mins read
e19743c9-d870-4b40-824a-d74b82f85324
-

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டம்

சென்னை: தேசி­யக்­கல்வி கொள்­கைக்கு மாற்­றாக தமிழ்­நாட்­டில் மாநில கல்வி கொள்கை உருவாக்­கப்­படும் என தமி­ழக பள்­ளிக்­கல்வித்­துறை அமைச்­சர் அன்­பில் மகேஷ் தெரி­வித்­துள்­ளார்.

புதிய கல்­விக் கொள்­கையை உரு­வாக்­கு­வ­தில் அரசு உறு­தி­யாக உள்­ளது என்­றும் அறிக்கை ஒன்­றில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"தமி­ழ­கத்­துக்கு என தனித் துவ­மா­ன­தொரு மாநி­லக் கல்­விக் கொள்கை தேவை என்­ப­தால் அதை வகுக்க வேண்­டும் என அரசு உறு­திபூண்­டுள்­ளது.

"இதற்­கென, ஓய்வுபெற்ற நீதிபதி முரு­கே­சன் தலை­மை­யில் ஓர் உயர்­மட்­டக் குழுவை அரசு அமைத்­துள்­ளது," என்று அமைச்­சர் அன்­பில் மகேஷ் தெரி­வித்­துள்­ளார்.

உயர்­மட்­டக் குழு தொடர்­பான அர­சா­ணையை கடந்­தாண்டு ஜூன் 1ஆம் தேதி அரசு வெளி­யிட்­டது என்­றும் அதன்­படி, கடந்த ஓராண்டு கால­மாக இக்­குழு மாண­வர்­கள், ஆசி­ரி­யர்­கள், பெற்­றோர், ஆசி­ரி­யர் சங்­கங்­கள், உயர் கல்வி நிறு­வ­னங்­கள், அரசு, நிகர்­நி­லைப் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளின் துணை­வேந்­தர்­கள் உள்­ளிட்­ட பல­ரு­ட­னும் தனித்­த­னி­யான கூட்­டங்­கள் நடத்­தப்­பட்­டன என்­றும் அமைச்­சர் தெரி­வித்­துள்­ளார்.

"இக்­கு­ழு­வின் செயல்­பா­டு­களில் எவ்­வி­தத்­தி­லும் அரசு அதி­கா­ரி­க­ளின் தலை­யீடு இருக்­க­வில்லை. குழு முழு­மை­யான சுதந்­தி­ரத்­து­டன் செயல்­பட்டு வரு­கிறது.

"தனித்­து­வ­மான மாநில கல்விக் கொள்­கையை உரு­வாக்­கும் பணி­யில், ஆழ­மான ஆய்­வுக் கண்­ணோட்­டத்­து­டன் இக்­குழு செயல்­பட்டு வரு­வ­தைப் புரிந்­து­கொள்ள முடி­கிறது. இந்த குழு­வின் செயல்­பா­டு­கள் மீது அரசு முழு­மை­யான நம்­பிக்­கை­யைக் கொண்­டுள்­ளது," என்று அமைச்­சர் அன்­பில் மகேஷ் கூறி­யுள்­ளார்.

உயர்­மட்­டக் குழு தனது இறுதி அறிக்­கையை அளிக்க மேலும் நான்கு மாதங்­கள் கால நீட்­டிப்பு தரப்­பட்­டுள்­ள­தா­கக் குறிப்­பிட்­டுள்ள அவர், அதன்­படி 2023 செப்­டம்­பர் மாத இறு­திக்­குள் அக்­குழு தனது அறிக்­கையை அளிக்­கும் எனத் தெரி­வித்­துள்­ளார்.

குழு­வின் அறிக்கை கிடைத்­த­தும் அதில் உள்ள பரிந்­து­ரை­களை அரசு கவ­ன­மு­டன் பரி­சீலிக்­கும் என்­றும் தமி­ழக மாண­வர்­க­ளின் எதிர்­கால நலன், மாநிலத்­தின் வளர்ச்சி ஆகி­ய­வற்றை கருத்­தில் கொண்டு தமிழ்­நாட்­டிற்­கென சிறப்­பா­ன­தொரு கல்­விக் கொள்­கையை வகுக்­கும் என்­றும் அமைச்­சர் உறு­தி­ய­ளித்­துள்­ளார்.