காதலன் திருமணத்தை தடுத்து நிறுத்தி, கரம் பிடித்த இளம்பெண்

காதலன் திருமணத்தை தடுத்து நிறுத்தி, கரம் பிடித்த இளம்பெண்

1 mins read
332094d7-2b32-4342-8d22-90b5fbb7f436
-

குமரி: தனது காத­ல­னுக்கு வேறு பெண்­ணு­டன் நடை­பெற இருந்த திரு­ம­ணத்தை தடுத்து நிறுத்தி, அவ­ரையே மணம் முடித்­துள்­ளார் கன்­னி­யா­கு­ம­ரி­யைச் சேர்ந்த இளம்­பெண் ரிமோல் விண்­ண­ரசி.

24 வய­தான இவ­ருக்­கும் பிள்­ளைத்­தோப்பு பகு­தி­யைச் சேர்ந்த 29 வய­தான லெனின் கிராஸ் என்­ப­வ­ருக்­கும் வாட்ஸ் அப் குழு மூலம் பழக்­கம் ஏற்­பட்­டது.

பின்­னர் இரு­வ­ரும் காத­லர்­களாக மாறி, கடந்த மூன்று ஆண்­டு­க­ளா­கக் காத­லித்து வந்­த­னர். லெனின் துபா­யில் வேலை பார்த்து வரு­கி­றார்.

திரு­ம­ணம் செய்துகொள்­ள­லாம் என்று லெனின் கூறிய ஆசை வார்த்­தை­களை நம்பி, அவ­ரு­டன் ரிமோல் உல்­லா­ச­மாக இருந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அண்­மை­யில் ஊர் திரும்­பிய லெனி­னுக்கு அவ­ரது பெற்­றோர் திரு­மண ஏற்­பா­டு­க­ளைச் செய்­த­னர். இதை அறிந்த ரிமோல் கடும் அதிர்ச்சி அடைந்­தார்.

கடந்த 11ஆம் தேதி லெனி­னின் திரு­ம­ணம் நடை­பெற இருந்­தது. இதை­ய­டுத்து திரு­மணம் நடை­பெற இருந்த தேவா­ல­யத்­துக்கு நேரில் சென்று அங்­குள்ள பங்­குத்­தந்­தை­யி­டம் முறை­யிட்­டார் ரிமோல். இத­னால் திரு­ம­ணம் தடை­பட்­டது. எனினும் ரிமோலை திரு­ம­ணம் செய்து­கொள்ள லெனின் மறுத்­தார்.

இத­னால் காவல்­து­றை­யில் முறை­யி­டப்­பட்­டது. காவல்­து­றை­யி­ன­ரி­டம் லெனி­னு­டன் தாம் எடுத்­துக்­கொண்ட புகைப்­ப­டங்­கள், துபா­யில் இருந்து தன் செல­வு­க­ளுக்­காக லெனின் மாதந்­தோ­றும் ரூ.5 ஆயி­ரம் அனுப்­பி­ய­தற்­கான ஆவ­ணங்­கள் ஆகி­ய­வற்றை அவர் காண்­பித்­தார். இதை­ய­டுத்து ரிமோலை திரு­ம­ணம் செய்துகொள்­ளு­மாறு காவல்­து­றை­யி­னர் லெனி­னுக்கு அறி­வுரை வழங்­கி­னர்.

அதன்­படி, வெள்­ளிக்­கி­ழமை இரவு லெனின், ரிமோல் திரு­மணம் நடை­பெற்­றது.

போராடி காத­ல­னைக் கைப்­பி­டித்த ரிமோலை சமூக ஊட­கங்­களில் பல­ரும் பாராட்டி உள்­ள­னர்.