ரூ.85,000 கட்டணம்: சென்னை, இலங்கை இடையே பயணிகள் கப்பல்

ரூ.85,000 கட்டணம்: சென்னை, இலங்கை இடையே பயணிகள் கப்பல்

1 mins read

சென்னை: எதிர்­வ­ரும் ஜூன் 5ஆம் தேதி முதல் தமி­ழ­கம், இலங்கை இடையே பய­ணி­கள் கப்­பல் இயக்­கப்­பட உள்­ளது. இது தொடர்­பான முழு விவ­ரங்­களும் தற்­போது வெளி­யாகி உள்­ளன.

மத்­திய அரசு 'சாகர்­மாலா' என்ற திட்­டத்­தின்கீழ், நீர்­வழிப் போக்­கு­வ­ரத்தை மேம்­ப­டுத்தும் பல்­வேறு நட­வ­டிக்­கை­களில் ஒன்றாக, மாநி­லங்­க­ளுக்­கும் அண்டை நாடு­க­ளுக்­கும் இடையே சுற்றுலா கப்­பல்­கள் இயக்க, தனி­யார் நிறு­வ­னங்­க­ளுக்கு அனு­மதி வழங்­கப்­ப­டு­கிறது.

அந்த வகை­யில் சென்னை துறை­மு­கத்­தில் இருந்து இலங்கைக்கு பய­ணி­கள் கப்­பல் இயக்­கப்­பட உள்­ளது.

இது இலங்­கை­யின் ஹம்­பன்­தோட்டா, திரி­கோ­ண­மலை, காங்­கே­சன் துறை, யாழ்ப்­பாணம், கொழும்பு உள்­ளிட்ட இடங்­க­ளுக்­குச் செல்­லும் என்­றும் மூன்று நாள் பய­ணத்­தொகுப்­புக்கு ஒரு தம்­ப­தி­யர்க்கு ரூ.85 ஆயி­ரம் கட்­ட­ணம் நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது என்­றும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சென்­னை­யில் இருந்து புறப்­படும் பய­ணி­யர் கப்­பல் 24 மணி நேரத்­திற்­குள், இலங்­கை­யின் பல்­வேறு துறை­மு­கங்­க­ளுக்­குச் சென்­ற­டை­யும். இந்த கப்­ப­லில், ஒரே நேரத்­தில் 1,600 பேர் வரை பய­ணம் மேற்­கொள்ள இய­லும்.