கள்ளக்குறிச்சி: தனியார் பள்ளி பேருந்துகள் சரியாக பராமரிக்கப்படுகின்றனவா என கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஷ்ரவன் குமார் (படம்) நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது திடீரென அவரே சில பேருந்துகளை இயக்கி சிறிது தூரம் ஓட்டிப் பார்த்தார்.
பின்னர் வாகன பராமரிப்பு குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு சில அறிவுரைகளையும் வழங்கினார். ஆட்சியரைப் பல்வேறு தரப்பினரும் பாராட்டி உள்ளனர்.

