முன்னாள் அமைச்சர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் அமைச்சர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

2 mins read
11ba3479-a963-46f7-96f9-189b71744fb6
-

சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கிய கே.பி. அன்பழகன், சி.விஜயபாஸ்கர்

சென்னை: அதி­முக முன்­னாள் அமைச்­சர்­கள் இரு­வர் மீதான சொத்­துக்­கு­விப்பு வழக்­கு­களில் தமி­ழக காவல்­துறை குற்­றப்­பத்­திரிகை தாக்­கல் செய்­துள்­ளது.

இத­னால் அதி­முக வட்­டாரங்­களில் சல­ச­லப்பு எழுந்­துள்ள நிலை­யில், இது பழி­வாங்­கும் நட­வ­டிக்கை என அக்­கட்சி தெரி­வித்­துள்­ளது.

கடந்த அதி­முக ஆட்­சிக் காலத்­தில் நிகழ்ந்­துள்ள ஊழல்­கள் தொடர்­பில் பார­பட்­ச­மற்ற வகை­யில் நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­படும் என்­று முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­தி­ருந்­தார்.

இந்­நி­லை­யில் முன்­னாள் அமைச்­சர்­கள் கே.பி.அன்ழகன், சி.விஜ­ய­பாஸ்­கர் ஆகிய இரு­வர் மீதும் தமி­ழக லஞ்ச ஒழிப்­புத் துறை சொத்­துக்­கு­விப்பு வழக்குப் பதிவு செய்­தது. அதன் பிறகு இது தொடர்­பாகத் தீவிர விசா­ர­ணை­யும் நடை­பெற்று வந்­தது.

இந்­நி­லை­யில் கே.பி.அன்­ழ­கன் மீது லஞ்ச ஒழிப்பு காவல்­து­றை­யி­னர் தர்­ம­புரி நீதி­மன்­றத்­தில் 10 ஆயி­ரம் பக்­கங்­கள் அடங்­கிய குற்­றப்­பத்­தி­ரி­கையை தாக்­கல் செய்­துள்­ளனர்.

இதே­போல் அதி­முக முன்­னாள் அமைச்­சர் சி.விஜ­ய­பாஸ்­கர் மீதான சொத்­துக்குவிப்பு வழக்­கி­லும் 216 பக்க குற்­றப்­பத்­தி­ரிகை புதுக்­கோட்டை நீதி­மன்­றத்­தில் லஞ்ச ஒழிப்­புத்­துறை தாக்­கல் செய்­துள்­ளது.

அமைச்­ச­ரா­கப் பதவி வகித்­த­போது கே.பி.அன்­ழ­கன் ரூ.45 கோடி வரை வரு­மா­னத்­துக்கும் அதி­க­மாக சொத்து சேர்த்­த­தாக லஞ்ச ஒழிப்­புத்­துறை தாக்­கல் செய்­துள்ள குற்­றப்­பத்­தி­ரிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

கடந்த அதி­முக ஆட்­சிக்­காலத்­தில் தமி­ழக உயர்­கல்­வித்­துறை அமைச்­ச­ராக அன்­ப­ழ­கன் பதவி வகித்­தார். சொத்­துக்­கு­விப்புப் புகார்­களை அடுத்து கடந்த ஆண்டு கே.பி.அன்­ப­ழ­க­னு­டன் தொடர்­பு­டைய 58 இடங்­களில் லஞ்ச ஒழிப்­புத்­து­றை­யி­னர் அதி­ரடி சோதனை நட­வ­டிக்கை மேற்­கொண்­ட­னர்.

அப்­போது ரூ.2.87 கோடி ரொக்­கப்­ப­ணம் 6.6 கிலோ தங்க நகை­கள், 13.85 கிலோ வெள்­ளிப் பொருள்­கள், முக்­கிய ஆவ­ணங்­கள் ஆகி­ய­வற்றை அதி­கா­ரி­கள் பறி­மு­தல் செய்­த­னர்.

இதை­ய­டுத்து, அன்­ப­க­ழன் மீதும் அவ­ரது குடும்­பத்­தார் உள்­ளிட்ட மேலும் 11 பேர் மீதும் வழக்­குப்­ப­தி­வா­னது. இந்த வழக்­கில்­தான் தற்­போது குற்­றப்­பத்­தி­ரிகை தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

இத­னி­டையே, அதி­முக முன்­னாள் அமைச்­சர் சி.விஜ­ய­பாஸ்­கர் மீதான சொத்­துக்­கு­விப்பு வழக்­கில் 216 பக்­கங்­கள் கொண்ட குற்­றப்­பத்­தி­ரிகை தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

கடந்த அதி­முக ஆட்­சியில் 2013 முதல் 2021ஆம் ஆண்டு வரை சுகா­தா­ரத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்­தார் சி.விஜ­ய­பாஸ்­கர். அச்­ச­ம­யம் வரு­மா­னத்­துக்கு அதி­க­மாகச் சொத்து குவித்­த­தாக அவர் மீதும் அவ­ரது மனைவி ரம்யா மீதும்­ வ­ழக்­குப் பதி­வா­னது.

அதை­ய­டுத்து விஜ­ய­பாஸ்­க­ரு­டன் தொடர்­பு­டைய முப்­பதுக்­கும் மேற்­பட்ட இடங்­களில் லஞ்ச ஒழிப்­புத் துறை­யி­னர் சோதனை நடத்­தி­னர்.