காஞ்சிபுரம்: கொரோனா நெருக்கடி காலத்துக்குப் பிறகு தமிழகம் வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வந்துள்ளதாகச் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஏறத்தாழ 800,000 சுற்றுலாப் பயணிகள் தமிழகத்தில் உள்ள சுற்று ்லாத் தலங்களுக்கு வருகை புரிந்துள்ளதாகத் தெரிவித்தார்.
"அதாவது, ஒட்டுமொத்தமாக ஒப்பீட்டளவில் பார்க்கும்போது, தமிழகத்துக்கான சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்," என்றார் அமைச்சர் ராமச்சந்திரன்.

