திமுக அமைச்சர்கள் குறித்து ஆளுநரிடம் அதிமுக புகார்

திமுக அமைச்சர்கள் குறித்து ஆளுநரிடம் அதிமுக புகார்

1 mins read

சென்னை: திமுக அமைச்­சர்­களுக்­குப் பல்­வேறு ஊழல்­களில் தொடர்­புள்­ள­தாகக் குற்­றம்­சாட்­டி­யுள்ள அதி­முக தலைமை, இது தொடர்­பாக தமி­ழக ஆளு­ந­ரி­டம் புகார் மனு அளித்­துள்­ளது.

நேற்று காலை கட்­சி­யின் பொதுச்­செ­ய­லா­ளர் தலை­மை­யில், அதி­மு­க­வி­னர் ஊர்­வ­ல­மாக ஆளு­நர் மாளிகை நோக்­கிச் சென்­ற­னர். அளு­நரை சந்­தித்­த­போது அவ­ரி­டம் புகார் மனுவை அளித்த பழ­னி­சாமி, பின்­னர் செய்­தி­யாளர்­க­ளி­டம் பேசி­னார்.

அப்­போது, ஆளு­ந­ரி­டம் திமுக அர­சின் இரண்­டாண்டு கால ஆட்சி­யில் நடை­பெற்ற ஊழல் குறித்­தும் சட்­டம் ஒழுங்கு சீர்கேடுகள் குறித்­தும் புகார் அளித்­த­தாகத் தெரி­வித்­தார். புகார் மனு­வைப் பெற்­றுக்­கொண்ட ஆளு­நர் அது­கு­றித்து பரி­சீ­லிப்­ப­தாகத் தெரி­வித்த­தா­க­வும் இபிஎஸ் கூறி­னார். திமுகவின் ஊழல் பணம் முழுவதும் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தில் முதலீடு செய்யப்படுவது போல தெரிகிறது என்றார் பழனிசாமி.