இலங்கை மீனவர்கள் கைது

இலங்கை மீனவர்கள் கைது

1 mins read

குமரி: இந்­திய கடல் எல்­லைக்­குள் அத்­து­மீறி நுழைந்த இலங்கை மீன­வர்­கள் கைது செய்­யப்­பட்­ட­னர்.

நேற்று முன்­தி­னம் அனைத்­து­லக எல்­லைப் பகு­தி­யில் பாது­காப்­புப் பணி­யில் இந்­திய கட­லோர பாது­காப்பு படைக்கு சொந்­த­மான வஜ்ரா என்ற கப்­பல் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது.

இந்­திய வீரர்­க­ளின் சுற்­றுக்­கா­வல் பணி­யின்­போது கன்­னி­யா­கு­மரி கடல் பகு­தி­யில் இருந்து 90 கடல் மைல் தொலை­வில் இலங்கை மீன­வர்­க­ளின் விசைப்­ப­டகு தென்­பட்­டது. விசைப்­ப­டகை சுற்றி வளைத்த பின்­னர் நடத்­திய விசா­ர­ணை­யின்­போது, இலங்கை நீர்க்­கொ­ழும்பு பகு­தி­யில் இருந்து கடந்த 17ஆம் தேதி மீன் பிடிக்க வந்­த­தா­க­வும் வழி தவறி இந்­திய கடற்­ப­கு­தி­யில் நுழைந்­து­விட்­ட­தா­க­வும் மீன­வர்­கள் தெரி­வித்­த­னர். பின்­னர் கட­லோ­ரப் பாது­காப்பு படை­யி­னர் ஐந்து பேரை­யும் கைது செய்­த­னர்.