மருத்துவக் கல்லூரி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை: பேராசிரியர் பணியிடை நீக்கம்

மருத்துவக் கல்லூரி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை: பேராசிரியர் பணியிடை நீக்கம்

1 mins read

மதுரை: மாண­வி­க­ளுக்கு பாலி­யல் தொல்லை கொடுத்­த­தாக எழுந்­துள்ள புகாரை அடுத்து மதுரை மருத்­து­வக் கல்­லூரி உத­விப் பேராசி­ரி­யர் ஒரு­வர் பணி­யிடை நீக்­கம் செய்­யப்­பட்­டுள்­ளார்.

அக்­கு­றிப்­பிட்ட கல்­லூ­ரி­யில் மயக்­க­வி­யல் துறை­யில் பணி­யாற்றி வரும் தாஹிர் உசைன் என்­ப­வர் தங்­க­ளி­டம் அத்­து­மீறி நடந்­து­கொண்­ட­தாக 18 மாண­வி­கள் கல்­லூரி நிர்­வா­கத்­தி­டம் புகார் அளித்­ததாகக் கூறப்­ப­டு­கிறது.

பேரா­சி­ரி­யர் ஒரு­வ­ரும்­கூட தாஹிர் உசைன் குறித்து புகார் தெரி­வித்­துள்­ள­தாக ஊட­கச் செய்தி­கள் தெரி­விக்­கின்­றன.

கல்­லூரி நிர்­வா­கம் மேற்­கொண்ட விசா­ர­ணை­யின்­போது மாண­வி­கள், இரு பேரா­சி­ரி­யர்­கள் உள்­ளிட்ட 23 பேர் தங்­கள் புகாரை எழுத்­து­பூர்­வ­மாக அளித்­துள்­ள­னர்.

பாலி­யல் உள்­ள­நோக்­கத்­தோடு தொடு­வது, பாலி­யல் ரீதி­யா­க அத்து­மீறிப் பேசு­வது, மோச­மாக வர்­ணிப்­பது என தாஹிர் பல­வி­த­மாக தொந்­த­ரவு செய்து வந்­த­தாக மாண­வி­கள் தெரி­வித்­துள்­ள­னர். ஆனால் உத­விப் பேரா­சி­ரி­யர் தாஹிர், மருத்­து­வத்­து­றை­யில் நடை­பெ­றும் முறை­கே­டு­க­ளை அம்­ப­லப்­ப­டுத்த முயன்­றதாலும் நிர்­வா­கத்­துக்கு எதி­ரா­க­வும் புகார் எழுப்­பி­ய­தா­லும் தாம் பழி­வாங்­கப்­ப­டு­வ­தா­கக் கூறி­யுள்­ளார்.