11 பேரை காவலில் வைத்து விசாரிக்க சிபிசிஐடி நாட்டம்

11 பேரை காவலில் வைத்து விசாரிக்க சிபிசிஐடி நாட்டம்

2 mins read
73c1609c-e649-4508-9209-136b9985e459
-

கள்ளச்சாராய வழக்குகள் கொலை வழக்காயின; டாஸ்மாக் விற்பனை கூடியது

சென்னை: தமிழ்­நாட்­டில் விழுப்­புரம், செங்­கல்­பட்டு மாவட்­டங்­களில் நிகழ்ந்த கள்­ளச்­சா­ராய மர­ணச் சம்­ப­வங்­கள் பற்றி புலன்­வி­சா­ரணை நடத்தி வரும் சிபி-­சிஐடி அதி­கா­ரி­கள், அந்த விவ­கா­ரம் தொடர்­பில் குற்­றம் சுமத்­தப்­பட்டு உள்ள 11 பேரைக் காவலில் எடுத்து விசா­ரிக்க அனு­மதி கேட்டனர்.

மரக்­கா­ணத்­தில் கள்­ளச்­சாரா­யம் குடித்து 14 பேர் மாண்­டது குறித்து அந்த 11 பேரையும் மூன்று நாள் காவ­லில் வைத்து விசா­ரிக்க வேண்­டும் என்று நீதி­மன்­றத்­தி­டம் சிபி­சி­ஐடி கோரிக்கை விடுத்தது.

அதை விசாரித்த விழுப்­பு­ரம் நீதி­மன்­றம் நேற்று அந்த மனுவை ஏற்று அனுமதி வழங்கியது.

அந்த 11 பேரும் இப்­போது கடலூர் மத்­திய சிறை­யில் அடைக்­கப்­பட்டுள்ளனர்.

இந்த விவ­கா­ரம் தொடர்­பில் மரக்­கா­ணம் பகு­தி­யைச் சேர்ந்த மதன் என்­ப­வர் இன்னமும் தேடப்­பட்டு வரு­கிறார்.

இத­னி­டையே, அந்த இரண்டு சம்­ப­வங்­க­ளி­லும் 22 பேர் மர­ணம் அடைந்த விவ­கா­ரத்தைக் கொலை என்று தமி­ழக காவல்­துறை வகைப்­ப­டுத்தி இருக்­கிறது.

இந்­நி­லை­யில், சிபி­சி­ஐடி அதி­கா­ரி­கள் மரக்­கா­ணம் பகு­தி­யில் உயிர்­ப்பலி ஏற்­பட்ட எக்­கி­யார்­குப்பம் மீனவ கிரா­மத்­திற்­குச் சென்று பல­ரை­யும் நேரில் பார்த்து விசா­ரணை நடத்­தி­னர்.

கள்­ளச்­சா­ராய உயிர்­ப்பலி சம்­ப­வங்­களை அடுத்து தமிழ்­நாடு முழு­வ­தும் கள்­ளச்­சா­ரா­யத்தைத் துடைத்­தொ­ழிக்க காவல்­துறை தீவிர முயற்சி எடுத்து வரு­கிறது. மாநி­லத்­தின் பல பகு­தி­க­ளி­லும் அதி­கா­ரி­கள் கள்­ளச்­சா­ராய வேட்டை­யில் குதித்துள்ளனர்.

திரு­வண்­ணா­மலை மாவட்­டத்­தில் பல இடங்­க­ளி­லும் காட்டுப் பகு­தி­க­ளி­லும் அதி­கா­ரி­கள் விடிய விடிய சோதனை நடத்­தி­ய­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

ஆரணி பகு­தி­யில் ஏற்­கெனவே 50க்கும் மேற்­பட்­டோர் கைதாகி கள்­ளச்­சா­ராய வழக்­குப் பதி­யப்­பட்டு உள்­ளது. இந்த நிலை­யில் அங்கு மேலும் 60 பேரை அதி­கா­ரி­கள் ஆளில்லா வானூர்தி மூலம் தேடி வரு­வதாக தகவல்கள் தெரிவித்தன.

இத­னி­டையே, மாநி­லத்­தில் கள்­ளச்­சா­ரா­யத்­துக்கு எதி­ரான நட­வ­டிக்கை தீவி­ர­மா­வ­தால் அர­சாங்­கத்­திற்­குச் சொந்­த­மான டாஸ்­மாக் கடை­களில் வியா­பா­ரம் பெருகி இருப்­ப­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­வித்­தன.