சென்னை: சென்னையில் புழல் சிறையில் உள்ளூர், வெளிநாடுகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
பொதுமக்களும் உறவினர்களும் பெண் கைதிகளுக்காக கொடுத்துவிட்டுச் சென்ற பழம், துணிமணிகளைப் பெற்றுக்கொள்ள கைதிகளை வரிசையில் வரும்படி அயனிங் ஜனதா, 35, என்ற சிறைக்காவல் அதிகாரி உத்தரவிட்டார்.
அப்போது உகாண்டாவைச் சேர்ந்த நசமாசரம், என்ற 35 வயது கைதி தனக்கு உடனடியாக பழம் வேண்டுமென்று அடம்பிடித்தார்.
அவரை வரிசையில் வரும்படி பெண் காவலர் கேட்டுக்கொண்டார். அதனால் கடுமையாக் கோபமடைந்த நசமாசரம் அந்தக் காவலரை அடித்து உதைத்து சரமாரியாகத் தாக்கினார்.
அதிகாரிகள் பெண் காவலரை மீட்டனர். இதன்தொடர்பில் புகார் தாக்கலாகி உள்ளது.

