ரத்தசோகையைத் துடைத்தொழிக்க இலக்கு: பள்ளிக்கு மருத்துவக் குழு; 25,000 முகாம்கள்

1 mins read
275047a5-c0c4-403c-b35e-a7d18b8ee7a4
-

சென்னை: தமி­ழ­கத்தை ரத்த சோகை இல்லா மாநி­ல­மாக்­கும் முயற்­சி­களை ஒட்டி பதின்ம வய­தி­ன­ருக்­காக 25,000 சிறப்பு முகாம்­கள் நடத்­தப்­படும் என்று அறி­விக்­கப்­பட்டு உள்­ளது.

சென்னை சைதாப்­பேட்­டை­யில் அத்­த­கைய ஒரு முகா­மைத்­தொடங்கி வைத்த சுகா­தா­ரத் துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன், அத்­த­கைய முகாம்களில் மாணவ, மாண­வி­க­ளுக்­குச் சுகாதார ஆலோ­ச­னை­கள், விழிப்­பு­ணர்வு, ரத்த சோகைக்­கான பரி­சோ­த­னை­கள் உள்­ளிட்ட அனைத்து சிறப்­புப் பரி­சோ­த­னை­களும் மேற்­கொள்ளப்­படும் என்­று தெரிவித்தார்.

இந்­தத் திட்­டத்­தின் மூலம் தமி­ழ­கம்­ மு­ழு­வ­தும் உள்ள 12 மில்­லி­யன் பதின்ம வய­தி­னர் பய­னடைவர் என்­றும் அமைச்­சர் கூறி­னார். மாநி­லத்­தில் உள்ள பதின்ம வய­தி­ன­ரி­டையே பெண்­களில் 52.9 விழுக்­காட்­டி­ன­ருக்­கும் ஆண்­களில் 24.6 விழுக்­காட்­டி­ன­ருக்­கும் ரத்த சோகை இருப்­பது தெரி­ய­வந்­து உள்­ளது.

ஆகை­யால் ரத்த சோகையால் பாதிக்­கப்­பட்ட பதின்ம வய தி­ன­ரைக் கண்­ட­றிந்து அவர்­களுக்கு 20 வகை­யான சிறப்பு மருத்­துவ சிகிச்­சை­களை வழங்­கு­வ­து­டன் ரத்த சோகை இல்லா தமி­ழ­க­மாக மாற்­று­வதே இந்த முகாம்­களின் நோக்­கம் என அமைச்­சர் விளக்­கி­னார்.

முகாம்­ திட்­டத்­தின்­படி அரசு மருத்­து­வர்­களும் தாதி­யரும் சுகா­தா­ரத் துறை ஊழியர்­களும் பள்­ளிக்­கூ­டங்­களுக்­கும் கல்­லூ­ரி­க­ளுக்­கும் செல்­வார்­கள்.

பள்­ளி­கள், கல்­லூ­ரிகள், 2,127 ஆரம்ப சுகா­தார நிலை யங்­க­ளி­ல் முகாம்­கள் நடக்கும். ரத்த சோகை­யைத் துடைத்து ஒழிக்க வரு­முன் காப்­போம் திட்­டத்­தின்­கீழ் நடத்­தப்­படும் முகாம்­களும் உத­வும்.