நெல்லை: பணியில் இருந்த பேருந்து நடத்துநர் ஒருவர் தான் செய்த தவறை மறைக்க தரையில் விழுந்து உருண்டு அழுது புரண்டார்.
திருப்பூரில் இருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து நெல்லை பேருந்து நிலையம் சென்றடைந்தபோது நாங்குநேரி செல்லும் பயணிகள் பேருந்தில் ஏறினர்.
ஆனால் பேருந்து நாங்கு நேரியில் நிற்காது. ஆகையால் நேரே நாகர்கோவில் போவோர் மட்டும் ஏறலாம் என்று நடத்துநர் கூறினார்.
அதையடுத்து நாங்குநேரியில் நிறுத்த வேண்டும் என பேருந்து நிலையத்தில் இருந்தவர்களும் நிறுத்தக்கூடாது என பேருந்துக்குள் இருந்தவர்களும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
அந்தச் செய்தி நாங்குநேரியை எட்டியதை அடுத்து பேருந்தை நாங்குநேரியில் மக்கள் மறித்தனர். காவல்துறை விரைந்தது.
அப்போது சிலர் நடத்துநரை தங்கள் கைப்பேசியில் படம் எடுத்தனர்.
நாங்குநேரியில் பேருந்து நிற்காது எனக் கூறியது தவறு என்பதை உணர்ந்த நடத்துநர் தரையில் உருண்டு அழ தொடங்கினார். பிறகு சமரசம் ஏற்பட்டு பேருந்து புறப்பட்டுச் சென்றது.