தமிழ்நாட்டில் 68% மக்களிடம் ரத்த அழுத்த பாதிப்பு அறியாமை

தமிழ்நாட்டில் 68% மக்களிடம் ரத்த அழுத்த பாதிப்பு அறியாமை

1 mins read

சென்னை: தமிழ்­நாட்­டில் உயா் ரத்த அழுத்த நோய்க்கு ஆளா­னோ­ரில் கிட்­டத்­தட்ட 68 விழுக்­காட்­டி­னர் தங்­க­ளுக்கு அத்­த­கைய பாதிப்பு இருப்­ப­தையே அறி­யா­மல் உள்­ள­தாக பொது சுகா­தா­ரத் துறை தெரி­வித்­துள்­ளது.

இது­கு­றித்து அந்­தத் துறை­யின் இயக்­குநா் டாக்டா் செல்­வ­வி­நா­ய­கம் கூறு­கை­யில், "கடந்த சில ஆண்­டு­க­ளாக உயா் ரத்த அழுத்த பாதிப்­புக்­குள்­ளா­வோ­ரின் எண்­ணிக்கை தமிழ்­நாட்­டில் அதி­க­ரித்து வரு­கிறது. வாழ்க்­கை­முறை மாற்­றங்­கள் இதற்கு முக்­கிய கார­ண­மா­கச் சொல்­லப்­பட்­டா­லும் நீரி­ழிவு நோய், மன அழுத்­தம் உள்­ளிட்ட இணை நோய்­களும் உயா் ரத்த அழுத்­தத்­துக்கு வழி­வ­குக்­கின்­றன.

"தமி­ழ­கத்­தைப் பொறுத்­த­வரை நூறு பேரில் 33 பேருக்கு அத்­த­கைய பாதிப்பு உள்­ளது. அதில் கவ­லைக்­கு­ரிய விஷ­யம் என்­ன­வெ­னில் பாதிப்­புக்­குள்­ளா­ன­வா்­களில் 32 விழுக்­காட்­டி­னர் மட்­டுமே தங்­க­ளது பாதிப்பு பற்றி தெரிந்து வைத்­துள்­ள­னர். மற்­ற­வா்­க­ளுக்கு அது­கு­றித்த விழிப்­பு­ணா்வு இல்லை. இத­னால், அவா்கள் மருத்­து­வப் பரி­சோ­த­னை­க­ளையோ சிகிச்­சை­க­ளையோ எடுத்­துக்­கொள்­வதில்லை.

"எனவே பேரா­பத்­தைத் தடுக்க 30 வய­துக்கு மேற்­பட்டோா் பரி­சோ­த­னை­களை மேற்­கொள்­வது அவ­சி­யம்," என்­றார்.