பிறந்தநாள் கேக்கை மாணவியின் கன்னத்தில் தடவி அடாவடி; நால்வர் கைது

பிறந்தநாள் கேக்கை மாணவியின் கன்னத்தில் தடவி அடாவடி; நால்வர் கைது

1 mins read

கோவை: பிறந்­த­நாள் கொண்­டாட்­டம் என்ற பெய­ரில் வீதி­யில் நடந்து சென்ற மாணவி மீது 'கேக்' தடவி அடா­வ­டி­யில் ஈடு­பட்ட நான்கு பேரை கோவை காவல்­துறை கைது செய்­தது.

அந்­நால்­வ­ரும் அம்­மா­ண­வியை அடித்து உதைத்­த­தா­க­வும் புகார் பதி­வாகி உள்­ளது.

கோவை குனி­ய­முத்­தூர் பகு­தியை சேர்ந்த அந்­த 15 வயது மாணவி பத்­தாம் வகுப்பு படித்து வரு­கி­றார். நேற்று முன்­தி­னம் வெளியே சென்­று­விட்டு, ஆறு­முக கவுண்­டர் வீதி­யில் உள்ள தனது வீட்­டுக்கு திரும்­பிக் கொண்­டி­ருந்­தார் அம்­மா­ணவி.

அப்­போது நான்கு பேர் சாலை­யின் நடுவே 'கேக்' வைத்து, அதை வெட்டி பிறந்த நாள் கொண்­டாட்­டத்­தில் ஈடு­பட்­டி­ருந்­த­னர். இந்­நி­லை­யில், நான்கு பேரும் திடீ­ரென, அந்த மாண­வி­யின் கன்­னத்­தில் 'கேக்'கை தட­வி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இத­னால் அதிர்ச்சி அடைந்த அம்­மா­ணவி, தன்­னி­டம் அத்­து­மீ­றி­ய­வர்­க­ளி­டம், வாக்­கு­வா­தத்­தில் ஈடு­பட்­டுள்­ளார். இத­னால் ஆத்­தி­ரம் அடைந்த நால்­வ­ரும் மாண­வியை அடித்து உதைத்­த­தாக கூறப்­ப­டு­கிறது.

இந்­தச் சம்­ப­வம் குறித்து பின்­னர் காவல்­து­றை­யில் புகார் அளிக்­கப்­பட்­டது. அதன் பேரில் விசா­ரணை மேற்­கொண்ட காவல்­து­றை­யி­னர், 16 வய­துச் சிறு­வன் உட்­பட நான்கு பேரை கைது செய்­த­னர்.