கண்கவரும் மலர்க்கண்காட்சி

கண்கவரும் மலர்க்கண்காட்சி

1 mins read
8f2507d3-5d17-4e89-b37e-c2aad1d82478
-

ஏற்காட்டில் நடைபெற்று வரும் மலர்க்கண்காட்சியைக் காண சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். கோடை விழாவையொட்டி அங்கு மின் விளக்கு அலங்காரமும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் சாரல் மழை பெய்து குளிர்காற்றும் வீசுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அங்குள்ள அண்ணா பூங்கா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பூக்களால் ஆன உருவங்கள் மின்னொளியில் ஜொலிப்பது அழகாக உள்ளது என சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர். படம்: ஊடகம்