தமிழ்வழி பாடப்பிரிவுகளை நீக்கியது அண்ணா பல்கலைக்கழகம்

தமிழ்வழி பாடப்பிரிவுகளை நீக்கியது அண்ணா பல்கலைக்கழகம்

1 mins read

சென்னை: அண்ணா பல்­க­லைக்­க­ழ­கத்­தின் உறுப்பு கல்­லூ­ரி­களில் தமிழ் வழி பாடப்­பி­ரி­வு­கள் தற்­கா­லி­க­மாக நீக்­கப்­பட்­டுள்­ள­தாக அப்­பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் அறி­வித்­துள்­ளது.

வரும் கல்வி ஆண்டு முதல் இந்த அறி­விப்பு நடை­மு­றைக்கு வரும் என அறிக்கை ஒன்­றில் அப்­பல்­கலை குறிப்­பிட்­டுள்­ளது.

தனது உறுப்பு கல்­லூ­ரி­களில் தமிழ் மொழி­யில் செயல்­பட்டு வரும் மெக்­கா­னிக்­கல், சிவில் பாடப் பிரி­வு­களை தற்­கா­லி­க­மாக நிறுத்­து­வ­தாக குறிப்­பிட்­டுள்ள அண்ணா பல்­க­லைக்­க­ழ­கம், மாண­வர் சேர்க்கை இல்­லா­த­தன் கார­ண­மாக இந்த நட­வ­டிக்­கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்­துள்­ளது.

மேலும் ஆறு ஆங்­கில வழி சிவில், மெக்­கா­னிக்­கல் பாடப்­பிரிவு­களும் மூடப்­படும் என பல்­கலைக்­க­ழ­கம் வெளி­யிட்ட அறிக்­கை­யில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அண்ணா பல்­க­லைக்­க­ழ­கத்­தின் கீழ் பதி­னொரு உறுப்­புக் கல்­லூ­ரி­கள் இயங்கி வரு­கின்­றன. அவற்­றில் தமிழ் வழி பாடப் பிரி­வு­கள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­ட­போது பல்­வேறு தரப்­பி­ன­ரும் பல்கலைக்கழகத்தின் முடிவை வர­வேற்­ற­னர்.

எனி­னும் அண்­மைக்­கா­லங்­களில் தமிழ் வழி பாடப் பிரி­வு­களில் மாண­வர் சேர்க்கை தொடர்ந்து சரிவு கண்டு வந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இதை­ய­டுத்து தமிழ் வழி பாடப்­பி­ரி­வு­கள் தற்­கா­லி­க­மாக நிறுத்­தப்­ப­டு­வ­தாக பல்­கலை நிர்­வா­கம் தெரி­வித்­தது.

இந்த திடீர் அறிவிப்பால் இத­னால் தமிழ் ஆர்­வ­லர்­கள் வருத்­த­ம­டைந்­துள்­ள­னர்.

இதை­ய­டுத்து மீண்­டும் அப்­பா­டப் பிரி­வு­க­ளைத் தொடங்­கு­வதற்­குத் தேவைப்­படும் நட­வ­டிக்­கை­கள் குறித்து அண்ணா பல்­க­லைக்­க­ழக நிர்­வா­கம் தீர ஆலோ­சிக்க வேண்­டும் என தமிழ் ஆர்­வ­லர்­கள் பலரும் வலி­யு­றுத்தி உள்­ள­னர்.