குடிமைப்பணி தேர்வை தமிழில் எழுதி தேர்ச்சி பெற்ற அதிகாரி

குடிமைப்பணி தேர்வை தமிழில் எழுதி தேர்ச்சி பெற்ற அதிகாரி

1 mins read
446f0388-9a17-488e-8b7e-527d2ba29496
-

குமரி: குடி­மைப்­ப­ணிக்­கான தேர்வை தமி­ழில் எழுதி தேர்ச்சி பெற்­றுள்­ளார் தென்­காசி பகு­தி­யைச் சேர்ந்த சுப்பு­ராஜ்.

அவ­ருக்கு இத்­தேர்­வில் இந்­திய அள­வில் 621ஆவது இடம் கிடைத்­துள்­ளது. அவ­ருக்­குப் பாராட்­டு­கள் குவி­கின்­றன.

தற்­போது 'ஐஎ­ஃப்­எஸ்' அதி­கா­ரி­யா­கப் பணி­யாற்றி வரும் சுப்­பு­ராஜ், கடந்த 2022ஆம் ஆண்டு மத்­திய அர­சுப் பணி­யா­ளர் தேர்­வா­ணை­யம் நடத்­திய தேர்­வில் பங்­கேற்­றார்.

அவர் தேர்வை தமி­ழில் எழு­தி­யி­ருந்­தார். இந்­நி­லை­யில் தேர்வு முடி­வு­கள் வெளி­யா­ன­போது அவர், இந்­திய அள­வில் 621ஆவது இடத்­தைப் பெற்று சாதித்­தி­ருப்­பது தெரி­ய­வந்­தது.

தமிழ் ஆர்வலர்கள் அவரது சாதனைக்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

சென்­னை­யைச் சேர்ந்த ஜீஜீ என்ற மாணவி அகில இந்­திய அள­வில் 107வது இடம் பிடித்து தமிழ்­நாடு அள­வில் முதல் இடத்தை பெற்­றுள்­ளார்.

கோவில்­பட்டி பகு­தி­யைச் சேர்ந்த ராம­கி­ருஷ்ண சாமி என்­ப­வர் 117ஆவது இடத்­தை­யும் சுபாஷ் கார்த்­திக் என்­ப­வர் 118ஆவது இடத்­தை­யும் பெற்­றுள்­ள­னர்.

சென்­னை­யைச் சேர்ந்த மதி­வ­தினி ராவ­ணன் 447ஆவது இடத்­தைப் பிடித்­துள்­ளார்.