பொன்முடி: அண்ணா பல்கலை கலந்தாலோசிக்கவில்லை

பொன்முடி: அண்ணா பல்கலை கலந்தாலோசிக்கவில்லை

1 mins read

சென்னை: அண்ணா பல்­க­லைக்­க­ழ­கம் அண்­மை­யில் தமிழ் வழி பாடப்­பி­ரி­வு­களை மூடு­வது தொடர்­பாக எடுத்­துள்ள நட­வடிக்கை குறித்து தமி­ழக அர­சுக்கு ஏதும் தெரி­யாது என உயர்­கல்­வித்­துறை அமைச்­சர் பொன்முடி தெரி­வித்­தார்.

அர­சுக்கே தெரி­யா­மல் அண்ணா பல்­க­லைக்­க­ழ­கம் அந்த அறி­விப்பை வெளி­யிட்­ட­தா­க­வும் அக்­கு­றிப்­பிட்ட பாடப் பிரி­வு­களை அர­சாங்­கம் நீக்­கப் போவ­தில்லை என்­றும் அவர் தெளி­வு­ப­டுத்தி உள்­ளார்.

அண்ணா பல்­க­லைக்­க­ழ­கத்­தின் கீழ் இயங்­கும் 11 உறுப்புக் கல்­லூ­ரி­களில் மாண­வர் சேர்க்கை குறை­வாக உள்ள பாடப்­பி­ரி­வு­களை தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைப்­ப­தாக அண்ணா பல்­க­லைக்­க­ழ­கம் அறி­வித்­துள்­ளது.

இதற்கு அர­சி­யல் கட்­சித் தலை­வர்­கள் உட்­பட பல்­வேறு தரப்­பி­னர் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ள­னர்.

தமிழ் வழி­யி­லான இயந்­தி­ரவியல், கட்­ட­ட­வி­யல் பாடப் பிரி­வு­களில் மாண­வர் சேர்க்கை குறை­வாக இருப்­ப­தாக அப்­பல்­கலை நிர்­வா­கம் விளக்­கம் அளித்­துள்­ளது.

எனி­னும் எதிர்ப்பு கிளம்­பி­யதை அடுத்து, தமிழ்­வழி பாடப்­பி­ரி­வு­களை தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைப்­ப­தாக வெளி­யிட்ட அறி­விப்பு திரும்­பப் பெறப்­ப­டு­வ­தாக அண்ணா பல்­க­லைக்­க­ழக துணை­வேந்­தர் ஆர்.வேல் ராஜ் தெரி­வித்­தார்.

இந்­நி­லை­யில், பொறி­யி­யல் கல்­லூ­ரி­களில் தமிழ் வழிப்பாடப்­பி­ரி­வு­கள் மூடப்­ப­டாது என உயர்­கல்­வித்­துறை அமைச்­சர் பொன்முடி திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்­துள்­ளார்.

"எத்­தனைப் பேர் படிக்­கி­றார்­கள் என்­பது முக்­கி­ய­மல்ல, தாய் மொழி­யில் படிக்க வேண்­டி­யது முக்­கி­யம்.

"எனவே பொறி­யி­யல் கல்­லூ­ரி­களில் தமிழ் வழி பாடப்­பி­ரி­வு­கள் மூடப்­ப­டாது என அண்ணா பல்­கலை அறி­வித்­துள்­ளது," என்­றார் அமைச்­சர் பொன்­முடி.