கோடை வெயில்: தமிழகத்தில் பள்ளித் திறப்பு ஒத்திவைப்பு

கோடை வெயில்: தமிழகத்தில் பள்ளித் திறப்பு ஒத்திவைப்பு

1 mins read

சென்னை: தமி­ழ­கத்­தில் கோடை வெயி­லின் தாக்­கம் நீடித்து வரு­வ­தால் பள்­ளி­க­ளைத் திறப்­பது ஒத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது.

கோடை விடு­மு­றைக்­குப் பின் ஜூன் 7ஆம் தேதி பள்­ளி­கள் திறக்­கப்­படும் என்று பள்ளிக்­ கல்வித் துறை அமைச்­சர் அன்பில் மகேஷ் தெரி­வித்­தார்.

பல்­வேறு தரப்­பி­ன­ரின் கோரிக்கையை ஏற்று பள்­ளி­களின் திறப்பு ஒத்தி வைக்­க­ப் பட்டுள்­ள­தா­கத் தெரி­கிறது.

கோடைக்­கால விடு­முறை முடிந்து ஜூன் ஒன்­றாம் தேதி 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை­யி­லான மாண­வர்­க­ளுக்கு பள்ளி­கள் திறக்­கப்­படும் என்­றும் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாண­வர்­க­ளுக்கு ஜூன் 5ஆம் தேதி பள்­ளி­கள் தொடங்­கும் என்றும் ஏற்­கெ­னவே தெரி­விக்­கப்­பட்டு இருந்­தது.

இந்­நி­லை­யில் வெயி­லின் தாக்கம் அதி­க­மாக உள்­ள­தால் பள்­ளி­கள் திறப்பு தேதி­களை மாற்ற பல்­வேறு தரப்­பி­னர் கோரிக்கை வைத்­துள்­ள­னர் என்­றும் அதை ஏற்று, ஜூன் 7ஆம் தேதி பள்­ளி­கள் திறக்­கப்­படும் என்­றும் பள்­ளிக்­கல்­வித் துறை அமைச்­சர் அறி­வித்­துள்­ளார்.

இது தொடர்­பாக அமைச்­சர் கூறு­கை­யில், "கோடை வெயி­லின் தாக்­கம் அதி­க­மாக இருப்­ப­தால் முதல்­வ­ரின் ஆணைக்­கிணங்க மாண­வர்­க­ளின் உடல்­நலத்­தைக் கருத்­தில் கொண்டு பள்­ளி­க­ளைத் திறப்­பது ஒத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது," என்­றார் அவர்.