சிதம்பரம்: சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயில் தீட்சிதர் களின் குழந்தைகளுக்குத் திரு மணம் செய்யப்படுவதாகப் புகார் வந்ததைத் தொடர்ந்து அதி காரிகள் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் தீட்சிதர் குழந்தைகள் திருமணப் படம் சமூக ஊடகங்களில் பரவி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த், சிதம்பரம் வந்து இது தொடர்பாக விசாரணை நடத்தினார்.
முதலில் நடராஜர் கோயிலுக்குச் சென்று தீட்சிதர்களிடம் குழந்தைகள் திருமணம் பற்றி விசாரித்தார். பின்னர் அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்று இந்த வழக்கு தொடர்பான அறிக்கையைக் கேட்டறிந்தார். மேலும் குழந்தைகள் திருமணம் நடைபெற்றதாகக் கூறப்படும் வீடுகளுக்கும் அவர் சென்று விசாரணை மேற்கொண்டார்.
இந்த நிலையில் தீட்சிதர் குழந்தைகளுக்குத் திருமணம் நடைபெற்ற புகைப்படம் சமூக ஊடகங்களில் பலரின் கவனத்தை ஈர்த்து புதிய சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

