கோவை: இந்தியா முழுவதும் ஜீப், கார், மோட்டர் பைக் ஆகிய வாகனங்களில் காவல்துறை யினர் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நாட்டிலேயே முதல் முறையாக கோவை மாநகரில் சுற்றுக்காவல் பணியில் இரண்டு ஆட்டோக்கள் சேர்க்கப்பட்டு உள்ளன.
சிவப்பு நிறத்துடன்கூடிய இரண்டு ஆட்டோக்களும் மின்சக்தியில் இயங்கக் கூடியவை. இவற்றில் எச்சரிக்கை ஒலி பெருக்கி, ஒளிரும் சிவப்பு, நீல விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன.
மேலும் ஆட்டோவின் நான்கு புறமும் போக்குவரத்து, காவல்துறையின் தொலைபேசி, அவசர உதவி எண்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன.
இரு ஆட்டோக்களும் நேற்று முதல் பணியைத் தொடங்கின.

