சென்னை: வந்தே பாரத் ரயில் களில் மேம்பட்ட வசதிகளை எதிர்பார்க்கலாம் என்று சென்னை பெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற் சாலையான ஐசிஎஃப் அறிவித்து உள்ளது.
ஐசிஎஃப் பொதுமேலாளர் பி. கோபிநாத் மால்யா வெள்ளிக் கிழமை செய்தியாளர்களிடம் பேசியபோது பெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற்சாலையில் 115 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க ஆணை கிடைத்துள்ளதாகவும் இதுவரை 21 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு இந்திய ரயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
இங்கு 16 பெட்டிகள் மற்றும் எட்டு பெட்டிகளைக் கொண்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை 180 கி.மீ. வேகத்தில் இயக்கச் சோதனை செய்யப்பட்டு, 160 கி.மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது.
தற்போது, டெல்லி-ஆக்ரா இடையே அதிகபட்சமாக மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகின்றது. இவ்வாண்டு இறுதிக் குள் படுக்கை வசதிகொண்ட வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
அண்மையில் டெல்லி-டேராடூன் வந்தே பாரத் ரயிலைப் பிர தமர் மோடி தொடங்கி வைத்தார்.

