ஒன்றரை ஆண்டுகளில் ரூ.43 கோடி அபராதம் வசூல்

ஒன்றரை ஆண்டுகளில் ரூ.43 கோடி அபராதம் வசூல்

1 mins read

சென்னை: கடந்த ஒன்­றரை ஆண்­டு­களில் மது­போ­தை­யில் வாக­னம் ஓட்­டி­ய­வர்­க­ளி­டம் இருந்து சென்னை போக்­கு­வரத்து காவல்­துறை ரூ.43 கோடி அப­ரா­தம் வசூலித்துள்ளது.

மது­போ­தை­யில் வாக­னம் ஓட்­டு­வ­தைத் தடுப்­ப­தற்­காக அத்­த­கைய குற்­றத்­துக்­கான அப­ராத தொகை பத்­தா­யி­ரம் ரூபா­யாக உயர்த்­தப்­பட்­டது. இந்த ஆண்டு ஜன­வரி முதல் கடந்த 24ஆம் தேதி வரை மட்­டும் 15,231 வழக்­கு­கள் பதி­வாகி உள்­ளன.

அப­ரா­தம் விதிக்­கப்­பட்­ட­வர்­களி­டம் இருந்து சுமார் 50 விழுக்­காடு அள­வுக்கு அப­ரா­தம் வசூல் செய்­யப்­பட்­டுள்­ளது. கடந்த ஆண்டு அப­ரா­தம் விதிக்­கப்­பட்ட 28,023 வழக்­கு­களில் 13,035 பேர் மட்­டுமே அப­ராதத் தொகையை செலுத்தி உள்­ள­னர் என்­றும் அவர்­க­ளி­டம் இருந்து ரூ.13 கோடி வசூ­லிக்­கப்­பட்டு உள்­ளது என்­றும் காவல்­துறை தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அப­ராதத் தொகை­யைச் செலுத்­தா­மல் காலம் தாழ்த்தி வரு­ப­வர்­க­ளி­டம் அப­ரா­தம் வசூ­லிக்­கும் நட­வ­டிக்­கை­களை போக்­கு­வ­ரத்து காவல்­து­றை­யினர் மேற்­கொண்டுள்ளனர்.