ஜூலை மாதம் சிற்றுண்டித் திட்டம் அமலுக்கு வரும்

ஜூலை மாதம் சிற்றுண்டித் திட்டம் அமலுக்கு வரும்

1 mins read

சென்னை: அனைத்து அர­சுப் பள்­ளி­க­ளி­லும் காலை சிற்­றுண்டி வழங்­கும் திட்­டம் ஜூலை மாதம் முதல் செயல்­ப­டுத்­தப்­பட உள்­ள­தாக அரசு வட்­டா­ரத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

தமி­ழ­கத்­தில் தற்­போது 1,545 அர­சுப் பள்­ளி­களில் காலை உணவு வழங்­கப்­ப­டு­கிறது. இதன்­மூ­லம் 114,000 மாணவ, மாண­வி­யர் பய­ன­டை­கின்­ற­னர்.

இதை­ய­டுத்து கூடு­தல் மாண­வர்­க­ளுக்கு சிற்­றுண்டி வழங்­கு­வதற்கு ஏது­வாக ரூ.500 கோடி ரூபாய் ஒதுக்­கீடு செய்­துள்­ளது அரசு.

இதன் மூலம் 18 லட்­சம் மாண­வர்­கள் பய­ன­டை­வர் என­வும் தெரி­விக்­கப்­பட்­டது. எனி­னும் வரும் கல்வி ஆண்டுக்­கான பள்ளி­கள் திறப்புக்கு ஒரு வாரமே உள்ள நிலை­யில், இத்­திட்­டத்தை செயல்­ப­டுத்த இய­லாது எனக் கூறப்­பட்­டது.

இந்­நி­லை­யில், மாண­வர் சேர்க்கை முடிந்த பின்­னர் கணக்­கெ­டுப்பு நடத்தி, ஜூலை மாதத்­தில் சிற்­றுண்டி திட்­டம் செயல்­படுத்­தப்­பட உள்­ள­தா­க­வும் அதற்­கான ஏற்­பா­டு­கள் நடை­பெற்று வரு­வ­தா­க­வும் அர­சுத் தரப்­புத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.