80 நிறுவனங்கள் பங்கேற்ற மாநாட்டில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உறுதி ‘முதலீட்டாளர்களுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு’

சென்னை: ஜப்­பான் நிறு­வ­னங்கள் தமி­ழ­கத்­தில் அதிக அள­வில் முத­லீ­டு­க­ளைச் செய்ய வேண்­டும் என முதல்­வர் மு.க.ஸ்டா­லின் கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

ஜப்­பா­னில் நடை­பெற்ற முத­லீட்­டா­ளர்­கள் மாநாட்­டில் கலந்து­கொண்டு பேசிய அவர், தமிழகத்­தின் தொழில், பொரு­ளியல் மேம்­பாட்­டுக்குப் பங்­க­ளிக்க முத­லீட்­டா­ளர்­களைச் சிவப்பு கம்­ப­ளம் விரித்து தமிழ்­நாடு வர­வேற்­ப­தாகக் குறிப்­பிட்­டார்.

ஜப்­பான் வெளி­நாட்டு வர்த்தக அமைப்­பின் உத­வி­யோடு நடை­பெற்ற இம்­மா­நாட்­டில் அந்­நாட்­டின் 80 நிறு­வ­னங்­க­ளின் மூத்த மேலாண்மை அலு­வ­லர்­கள் கலந்துகொண்­ட­னர்.

அப்­போது பேசிய முதல்­வர் மு.க.ஸ்டா­லின், தமி­ழ­கத்­தில் அடுத்த ஆண்டு நடை­பெற உள்ள அனைத்­து­லக முத­லீட்­டா­ளர்­கள் மாநாட்­டுக்கு ஜப்­பான் நிறு­வ­னங்­கள் ஒத்­து­ழைப்பு அளிக்க வேண்­டும் என கேட்­டுக்­கொண்­டார்.

“உலக முத­லீட்­டா­ளர் மாநாட்­டுக்கு அழைப்பு விடுப்­ப­தற்­காக எங்­கள் மாநி­லத்­தில் இருந்து பல்­வேறு நாடு­க­ளுக்கு நாங்­கள் பய­ணம் மேற்­கொண்டு வரு­கிறோம். அந்த வரி­சை­யில், முதல் சுற்றுப்­பய­ண­மாக சிங்­கப்பூர், ஜப்பானுக்கு வந்­துள்­ளேன்.

“இந்­திய சந்­தைக்­குள் நுழை­யும் ஜப்­பா­னிய நிறு­வ­னங்­க­ளின் எண்­ணிக்கை தொடர்ந்து அதி­க­ரித்து வரு­கிறது.

“இந்­தி­யா­வுக்­குள், ஜப்­பா­னிய முத­லீ­டு­க­ளுக்கு உகந்த மாநி­ல­மாக விளங்­கு­வ­தில் தமி­ழ­கம் தொடர்ந்து முன்­ன­ணி­யில் உள்­ளது,” என்­றார் முதல்­வர் மு.க.ஸ்டா­லின்.

தெற்­கா­சி­யா­வி­லேயே, முத­லீடு­களை ஈர்த்­திட உகந்த மாநி­ல­மாகத் தமி­ழ­கத்தை உயர்த்­திட அனைத்து முயற்­சி­க­ளை­யும் மேற்­கொண்டு வரு­வ­தா­கக் குறிப்­பிட்ட அவர், எண்­ணற்ற ஜப்­பா­னிய நிறு­வ­னங்­கள், தமிழ்­நாட்டைத் தேர்ந்­தெ­டுத்து, தங்­கள் திட்­டங்­க­ளைச் செயல்­ப­டுத்தி வரு­வ­தா­கத் தெரி­வித்­தார்.

ஜப்­பா­னைச் சேர்ந்த மிகப்­பெ­ரும் நிறு­வ­னங்­கள், தங்­கள் உற்­பத்தித் திட்­டங்­களை தமிழ்­நாட்டில் செயல்­ப­டுத்தி உள்­ள­தாகக் குறிப்­பிட்ட முதல்­வர், அந்­நி­று­வ­னங்­க­ளின் பெயர்­க­ளைப் பட்­டி­ய­லிட்­டார்.

“ஜப்­பான், இந்­தியா முத­லீடு மேம்­பாட்டுக் கூட்­டாண்மை திட்­டத்­தின்­கீழ் இந்­தி­யா­வில் நிறு­வப்­பட்­டுள்ள 12 தொழில் நக­ரி­யங்­களில் மூன்று தமிழ்­நாட்­டில் அமைந்­துள்­ளன.

“தமிழ்­நாட்­டில், அதிக எண்ணிக்கையிலான ஜப்­பா­னி­யர்­கள் வசித்து வரு­கின்­ற­னர்.

“ஜப்­பா­னில் உள்ள மிகப்­பெரும் வங்­கி­க­ளான, பேங்க் ஆஃப் டோக்­கியோ உள்­ளிட்ட மூன்று வங்­கி­க­ளு­டன் புரிந்துணர்வு ஒப்­பந்­தம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

“மேலும் பல ஜப்­பா­னிய மாகா­ணங்­க­ளு­டன் பேச்­சு­வார்த்­தை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன,” என்­றார் முதல்­வர் ஸ்டா­லின்.

முத­லீட்­டா­ளர்­கள் விரும்­பும் மாநி­ல­மாக, தமிழ்­நாடு சிறந்து விளங்கி வரு­கிறது என்­றும் பெரும்­பா­லும் உற்­பத்தி சார்ந்த துறை­களில் மட்­டுமே முத­லீ­டு­களை மேற்­கொள்ள விழை­யும் ஜப்­பா­னிய நிறு­வ­னங்­கள் இந்­நி­லைப்­பாட்டை சற்றே விரி­வு­படுத்தி, மேம்­பாட்டு திட்­டங்­க­ளி­லும் முத­லீடுகளை மேற்­கொள்ள வேண்­டும் என்­றும் முதல்­வர் ஸ்டா­லின் கேட்­டுக்­கொண்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!