குன்னூரில் பழக் கண்காட்சி
குன்னூரில் 63வது பழக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதைக் காண நாள்தோறும் ஏராளமானோர் வருகை தருகின்றனர். படம்: தமிழக ஊடகம்
சிறப்பான செயல்பாடு: தமிழக குடிநீர் வடிகால் வாரியத்துக்கு விருது
விருதுநகர்: இந்திய அளவில் சிறந்த செயல்பாட்டுக்கான விருதை தமிழகக் குடிநீர் வடிகால் வாரியம் பெற்றுள்ளது.
திமுக ஆட்சியில் தான் குடிநீர் வடிகால் வாரியம் இச்சாதனையைப் புரிந்துள்ளது என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். விருதுநகரில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 10 ஆண்டுகளில் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு ரூ.11 ஆயிரம் கோடி நிதி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டிருந்தது என்றார். "ஆனால் கடந்த இரண்டு ஆண்டு களில் அந்த வாரியத்திற்கு ரூ.30 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. எனவே குடிநீர் வடிகால் வாரியம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன," என்றார் அமைச்சர் நேரு.
கிருத்திகா உதயநிதி சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை
சென்னை: அமைச்சர் உதயநிதியின் மனைவி கிருத்திகா உதயநிதியின் சொத்துகளை மத்திய அமலாக்கத்துறை திடீரென முடக்கியுள்ளது. இதனால் திமுக வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது. மொத்தம் ரூ.36.3 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகள் முடக்கப்பட்டிருப்பதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது. அண்மையில் உதயநிதி அறக்கட்டளை, கல்லல் குழுமம் ஆகியவற்றுடன் தொடர்புடைய இடங்களில் மத்திய அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அந்நடவடிக்கையை அடுத்து, கிருத்திகா உதயநிதியின் அசையா சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும், அவரது வங்கிக் கணக்கில் உள்ள 36.3 லட்சம் ரூபாயையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
பேருந்து சேவையை அதிகரிக்க வலியுறுத்தி பேருந்து சிறைபிடிப்பு
நீலகிரி: அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப் பட்டதால் நீலகிரியில் பொதுமக்கள் அரசுப் பேருந்தை சிறைபிடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள காந்தல் பகுதிக்குக் கூடுதல் பேருந்துகளை இயக்கக் கோரி நீண்ட காலமாக மனுக்கள் அளிக்கப்பட்டதாக பொதுமக்கள் கூறினர். எனினும் 20,000 பேர் வசிக்கும் தங்கள் பகுதிக்கு ஆறு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், அந்த எண்ணிக்கை இரண்டாகக் குறைந்துள் ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அதிகாரி களுடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

