பழனிசாமிக்கு எதிரான வழக்கில் ஓபிஎஸ் சாட்சி

பழனிசாமிக்கு எதிரான வழக்கில் ஓபிஎஸ் சாட்சி

1 mins read

சென்னை: முன்­னாள் முதல்­வர் எடப்­பாடி பழ­னி­சா­மிக்கு எதி­ரான வழக்­கில் ஓ.பன்­னீர்­செல்­வம் அர­சுத் தரப்பு சாட்­சி­யாக சேர்க்­கப்­பட்­டுள்­ளார்.

ஏற்­கெ­னவே இரு­வ­ருக்­கும் இடையே மோதல் வலுத்து வரும் நிலை­யில், காவல்­து­றை­யின் இந்­ந­ட­வ­டிக்­கைக்கு பழ­னி­சாமி தரப்­பி­னர் கடும் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ள­னர்.

கடந்த 2021ஆம் ஆண்டு நடை­பெற்ற சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லில் சேலம் மாவட்­டம் எடப்­பாடி தொகு­தி­யில் போட்­டி­யிட்­டார் பழ­னி­சாமி. அப்­போது தனது வேட்­பு­மனுவு­டன் தனது சொத்­து­கள் தொடர்­பான பிரமாண பத்­தி­ரம் ஒன்றை அவர் தாக்­கல் செய்­தி­ருந்­தார்.

அதில் தமது சொத்து மதிப்பு குறித்து பழ­னி­சாமி தவ­றான தக­வல்­க­ளைக் குறிப்­பிட்­டுள்­ள­தா­கப் புகார் எழுந்­துள்­ளது.

இது­கு­றித்து உரிய நட­வடிக்கை எடுக்­கக்­கோரி தேனியைச் சேர்ந்த மிலானி என்­ப­வர் சேலம் நீதி­மன்­றத்­துக்கு இணை­யம் வழி புகார் மனு ஒன்றை அனுப்பி இருந்­தார். இப்­பு­கார் தொடர்­பாக நீதி­மன்ற உத்­த­ர­வின் பேரில் சேலம் காவல்­துறை விசா­ரணை மேற்­கொண்­டது.

இந்­நி­லை­யில், இந்­தப் புகார் தொடர்­பாக முன்­னாள் முதல்­வர் ஓ.பன்­னீர்­செல்­வத்தை சாட்­சி­யாகக் கருதி விசா­ரிக்க வேண்டும் என்­றும் மிலானி தமது மனு­வில் கோரி­யுள்­ளார்.

அதன் அடிப்­ப­டை­யில், இந்த வழக்­கில் ஓ.பன்­னீர்­செல்­வத்தை காவல்­துறை சாட்­சி­யாகச் சேர்த்­துள்­ளது.