வேடிக்கை பார்க்க இயலாது: காவல்துறைக்கு எச்சரிக்கை

வேடிக்கை பார்க்க இயலாது: காவல்துறைக்கு எச்சரிக்கை

1 mins read

சென்னை: விசா­ரணை என்ற பெய­ரில் காவல்­து­றை­யி­னர் துன்­பு­றுத்­து­வதை நீதி­மன்­றம் வேடிக்கை பார்க்­காது என்று சென்னை உயர் நீதி­மன்­றம் தெரி­வித்­துள்­ளது.

காவல்­துறை விசா­ர­ணை­யில் நீதி­மன்­ற­மும் தலை­யி­டு­வது இல்லை என்­பதை காவல்­து­றை­யி­னர் தங்­க­ளுக்குச் சாத­க­மாக பயன்­ப­டுத்­தக் கூடாது என்­றும் உயர் நீதி­மன்­றம் கூறி­யுள்­ளது.

நெல்­லை­யில் விசா­ர­ணைக்­காகக் காவல் நிலை­யத்­துக்கு அழைத்­துச் செல்­லப்­பட்­ட­வர்­களின் பற்­க­ளைப் பிடுங்கி காவல்­து­றை­யி­னர் சித்­தி­ர­வதை செய்­த­தாக அண்­மை­யில் புகார்­கள் எழுந்­தன.

இது­கு­றித்து விசா­ரணை நடை­பெற்று வரு­கிறது.

இந்­நி­லை­யில், சேலம் மாவட்­டத்­தைச் சேர்ந்த ரஜினி என்­பவர் சென்னை உயர் நீதி­மன்றத்­தில் மனு ஒன்றைத் தாக்­கல் செய்­துள்­ளார்.

அதில் சேலம் மாவட்­டம் மத்திய குற்­றப்­பி­ரிவு காவல்­துறை விசா­ர­ணைக்­காக முன்­னி­லை­யா­கு­மாறு தமக்கு அழைப்­பாணை வந்­தி­ருப்­ப­தா­க­வும் அவ்­வாறு விசா­ர­ணைக்­குச் செல்­லும்­போது தம்மை துன்­புறுத்­தக் கூடாது என­வும் அவர் கேட்­டுக் கொண்­டுள்­ளார்.

இது தொடர்­பாக காவல்­துறைக்கு உரிய உத்­த­ரவை நீதி­மன்­றம் பிறப்­பிக்க வேண்­டும் என்­றும் ரஜினி கோரி­யுள்­ளார்.

இம்­ம­னுவை விசா­ரித்த நீதிபதி, காவல்­துறை விசாரணை­யில் நீதி­மன்­றம் தலை­யிட முடி­யாது என்­ப­தால் காவல்­துறை தங்­களைத் துன்­பு­றுத்தக் கூடாது என்ற கோரிக்­கை­யு­டன் ஏரா­ள­மான மனுக்­கள் தாக்­கல் செய்­யப்­ப­டு­வ­தா­கக் குறிப்­பிட்டார்.

"காவல்துறை விசாரணையில் நீதிமன்றம் தலையிடுவதில்லை. எனினும் இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு யாரையாவது துன்புறுத்தியதாக நீதிமன்ற கவனத்துக்கு தகவல் வந்தால் கைகட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்க இயலாது," என்று உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.