‘இந்தியா, ஜப்பான் உறவு புதிய வரலாறு படைக்க வேண்டும்’

மு.க.ஸ்டாலின்: இந்தியாவுக்கு வளமும் பெருமையும் சேர்க்கிறது தமிழகம்

சென்னை: ஏழு கோடி மக்­கள் வாழும் தமிழ்­நாட்­டின் முதல்­வ­ராக தாம் ஜப்­பா­னுக்­குப் பய­ணம் மேற்­கொண்­டுள்­ள­தா­க­வும் இந்­தி­யா­வுக்­குப் பெரு­மை­யும் வள­மும் சேர்க்­கும் மாநி­ல­மாக தமிழ்­நாடு திகழ்­கிறது என்­றும் முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

ஜப்­பான் நாட்­டின் ஒசா­கா­வில் இந்­திய தூத­ர­கம் ஏற்­பாடு செய்­தி­ருந்த கலா­சார சந்­திப்பு நிகழ்ச்சி­யில் கலந்­து­கொண்டு பேசிய அவர், ஜப்­பான், இந்­திய நட்­பு­றவு புதிய வரலாற்றைப் படைக்க வேண்­டும் என்றார்.

“தமிழ்­நாட்­டின் தொன்­மை­யை­யும் பழ­மை­யை­யும் கீழ­டி­யும் பொரு­நை­யும் இன்று ஒட்­டுமொத்த உல­குக்­கும் அடை­யா­ளம் காட்டி வரு­கிறது.

“தமி­ழ­கத்­தில் அனைத்து தரப்­பி­ன­ரின் முன்­னேற்­றத்­துக்­காக திமுக ஆட்சி செய­லாற்றி வரு­கிறது. தமி­ழக அர­சின் திட்­டங்­களை இந்­தி­யா­வின் பிற மாநி­லங்­களும் பின்­பற்றத் தொடங்கி உள்ளன.

“இப்­ப­டிப்­பட்ட நிலை­யில்­தான், தொழில் வளர்ச்­சி­யி­லும் கவ­னம் செலுத்தி வரு­கி­றோம்.

“இந்­தி­யா­வுக்­கும் ஜப்­பா­னுக்­கு­மான நட்பு என்­பது பரந்த அடிப்­படையில், செயல் சார்ந்­த­தாக இருக்க வேண்­டும் என்று இந்­திய அரசு நினைக்­கிறது.

“வர்த்­தக உற­வு­க­ளை­யும் தாண்­டிய நட்­பு­ற­வாக அது அமைய வேண்­டும்,” என்­றார் முதல்­வர் மு.க.ஸ்டா­லின்.

2012ஆம் ஆண்டு இந்­தி­யா­வுக்கும் ஜப்­பா­னுக்­கும் இடையே ஆன ராஜ­தந்­திர உற­வு­கள் ஏற்பட்டு 60வது ஆண்டு விழா கொண்­டா­டப்­பட்­ட­தைச் சுட்­டிக்­காட்­டிய அவர், ‘மீண்­டும் ஜப்­பான் - துடிப்­பான இந்­தியா - புதிய பார்­வை­கள் புதிய பரி­மாற்­றங்­கள்’ என்று அதற்குத் தலைப்பு தரப்­பட்டு இரு நாடு­க­ளி­லும் கலா­சார விழாக்­கள் நடை­பெற்­ற­தா­கக் குறிப்­பிட்­டார்.

இத்­த­கைய கலா­சார தொடர்பு­கள் தொடர வேண்­டும் என்று வலி­யு­றுத்­திய முதல்­வர் ஸ்டாலின், 1997ஆம் ஆண்டு மேயர்­கள் மாநாட்­டுக்­காக தாம் ஜப்­பான் வந்­ததை நினை­வு­கூர்ந்­தார்.

சென்னை மக்­க­ளின் போக்கு­வ­ரத்து தேவையை நிறை­வேற்ற மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்­ப­டுத்­த­வும் ஒகே­னக்­கல் கூட்­டுக் குடி­நீர் திட்­டத்­துக்கு நிதி உதவி கேட்­டும் கடந்த 2008ஆம் ஆண்டு ஜப்­பா­னுக்கு வந்­த­தாக நினை­வு­கூர்ந்த முதல்வர் ஸ்டா­லின், தமிழ்­நாட்டை நோக்கி முத­லீட்­டா­ளர்­களை அழைத்­து­வர அனைத்­துத் தரப்­பி­ன­ரும் ஒத்­து­ழைக்க வேண்­டும் எனக் கேட்­டுக்­கொண்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!