சிலம்பம் சுழற்றி சாதனை

சிலம்பம் சுழற்றி சாதனை

1 mins read
b49144bf-ac8c-4aed-a99a-a053772307f7
-

திருச்சி: ஏழாம் வகுப்பு மாண­வி­யான ரிபாயா தொடர்ந்து பத்து மணி நேரம் சிலம்­பம் சுழற்றி சாதனை (படம்) படைத்­துள்­ளார்.

திருச்சி மாவட்­டம், பொன்­மலை பகு­தியைச் சேர்ந்த அம்­மாணவி நேற்று முன்­தி­னம் பள்ளி வளா­கம் ஒன்­றில் இந்­தச் சாதனை முயற்சி­யில் ஈடு­பட்­டார்.

காலை 6.20 மணிக்கு சிலம்பம் சுற்­றத் தொடங்­கிய அச்­சி­றுமி, தொடர்்ந்து 10 மணி­நே­ரம், 10 நிமி­டங்­கள், 10 விநா­டி­களுக்குச் சிலம்­பத்­தைச் சுழற்­றி­னார். சிறுமியின் சாத­னையை நேரில் காணத் திரண்­டி­ருந்த அவ­ரது நண்­பர்­களும் பொது­மக்­களும் அவ­ரை வெகுவாகப் பாராட்டினர்.