சிலைகள் மீட்பு; போலி சாமியார் கைது

சிலைகள் மீட்பு; போலி சாமியார் கைது

1 mins read
82a0eca5-5590-4220-9639-ad96e3acad6d
-

சேலம்: அண்­மை­யில் திருடுபோன ஏழு சாமி சிலை­களை சேலம் காவல்­து­றை­யி­னர் மீட்டுள்­ள­னர். இது தொடர்­பாகப் போலி சாமி­யார் ஒரு­வர் கைதானார்.

சேலம் மாவட்டம், தார­மங்­க­லத்­தில் வர­த­ராஜ பெரு­மாள் கோவில் உள்­ளது. அங்­குள்ள மடத்­தில் வைக்­கப்­பட்­டி­ருந்த ஏழு சாமி சிலை­கள் திடீ­ரென மாய­மா­கின.

அக்­கோ­வி­லில் இரவு நேரக் காவ­லர்­கள் யாரும் பணி­யில் இல்லை. அதை­ய­றிந்த திரு­டர்­கள் சிலர் கோவி­லுக்­குள் புகுந்து கைவரிசை காட்டினர்.

இது­கு­றித்து காவல்­துறை மேற்­கொண்ட விசா­ர­ணை­யில், குள்ளா­னூர் பகு­தி­யைச் சேர்ந்த சக்­தி­வேல் என்­ப­வர்­தான் சிலை­க­ளைத் திரு­டி­யுள்­ளார் என்­பது தெரி­ய­வந்­தது. 50 வய­தான அவர் போலி சாமி­யா­ராக வலம் வந்­துள்­ளார்.

துரிதகதி­யில் செயல்­பட்ட காவல்­து­றை­யி­னர் சக்­தி­வேலை கைது செய்­த­னர். தனது வாக்­கு­மூ­லத்­தில் 20 ஆண்­டு­க­ளுக்கு முன்பே மனை­வி­யைப் பிரிந்­து­விட்­ட­தா­க­வும் அதன்பிறகு ஆன்மிக ஈடு­பாடு கார­ண­மாக சாமி­யா­ராக மாறி­ய­தா­க­வும் குறிப்­பிட்­டுள்­ளார்.

பில்லி, சூனி­யம், மாந்­தி­ரி­கம் என்று கூறி சிறப்­புப் பூசை­களை நடத்­தி­ய­தா­லும் குழந்­தைப்­பேறு உள்­ளிட்ட பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தாகக் கூறி­ய­தா­லும் அதி­க­மா­னோர் தம்மை நாடி வந்­த­தாக சக்­தி­வேல் கூறி­யுள்­ளார்.

"இந்­தப் பகு­தி­யில் கோவில் கட்ட திட்­ட­மிட்டேன். அதற்­குப் பணம் திரட்ட ஏதா­வது கோவி­லில் இருந்து சிலை­களைத் திருட முடிவு செய்தேன். காவல்­து­றை­ எப்­ப­டியோ கண்­டு­பி­டித்­து­விட்­ட­து," என்று சக்­தி­வேல் வாக்­கு­மூ­லம் அளித்­துள்­ளார்.