சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அதிக அளவிலான சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை முன்னேற்ற இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் திறன்களும் ஜப்பானின் உற்பத்தி நிபுணத்துவமும் உதவும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்திய, ஜப்பானிய கூட்டு உச்சி மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்தவேண்டும் எனத் தாம் விரும்புவதாக நேற்று ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு ஏற்பாடு செய்த நிகழ்வில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.

