அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக ஆர்ப்பாட்டம்

அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக ஆர்ப்பாட்டம்

1 mins read
8020d1db-2310-4a11-ac8c-c8abc1b5cd87
-

பழனிசாமி: சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது, முதல்வர் பதவி விலகவேண்டும்

சென்னை: தமி­ழ­கத்­தில் சட்­டம் ஒழுங்கு நிலைமை கடு­மை­யாக சீர்­கு­லைந்­துள்­ள­தாக அதி­முக தலைமை சாடி உள்­ளது.

எனவே முதல்­வர் பத­வி­யில் இருந்து மு.க.ஸ்டா­லின் உட­ன­டி­யாக விலகவேண்­டும் என­வும் அக்­கட்சி வலி­யு­றுத்தி உள்­ளது.

திமுக அர­சைக் கண்­டித்து தமி­ழ­கம் முழு­வ­தும் அனைத்து மாவட்ட ஆட்­சி­யர் அலு­வ­லகங்கள் முன்பு அதி­முக சார்­பில் நேற்று ஆர்ப்­பாட்­டங்­கள் நடை­பெற்­றன.

அதி­முக முன்­னாள் அமைச்­சர்­களும் நடப்பு மாவட்டச் செய­லா­ளர்­களும் ஆர்ப்­பாட்­டங்­க­ளுக்­குத் தலைமை தாங்­கி­னர். அதில் பங்­கேற்ற அதி­முக தொண்­டர்­கள் திமுக அர­சுக்கு எதி­ராக முழக்­கங்­கள் எழுப்­பி­னர்.

சேலத்­தில் நடை­பெற்ற ஆர்ப்­பாட்­டத்­தில் எடப்­பாடி பழ­னி­சாமி பங்­கேற்­றார்.

சென்­னை­யில் ஏற்­கெ­னவே பேரணி நடத்தி, ஆளு­ந­ரி­டம் மனு­ அ­ளித்­தி­ருப்­ப­தால், சென்னை மாவட்­டத்­தில் எங்கும் ஆர்ப்­பாட்­டம் இல்லை என அதிமுக நிர்­வா­கி­கள் முன்பே அறி­வித்­தி­ருந்­த­னர்.

கள்­ளச்­சா­ராய மர­ணங்­கள் நிகழ திமுக அர­சின் அலட்சியப் போக்­குதான் கார­ணம் என ஆர்ப்பாட்­டத்­தில் பங்­கேற்ற அதி­முக பிர­மு­கர்­கள் குற்­றம் சாட்­டி­னர்.

முன்­னாள் அமைச்­சர்­கள் செல்­லூர் ராஜு, செங்­கோட்டை­யன், சி.வி.சண்­மு­கம், எஸ்.பி.வேலு­மணி, விஜ­ய­பாஸ்­கர் ஆகி­யோர் ஆர்ப்­பாட்­டங்­களில் பங்­கேற்­ற­னர்.

"தமி­ழ­கத்­தில் சட்­டம், ஒழுங்கு சீர்­கு­லைந்­துள்­ளது எனில் அதற்கு மாநில முதல்­வர் என்ற வகை­யில் மு.க.ஸ்டா­லின்­தான் பொறுப்பு ஏற்க வேண்­டும். அவர் உட­னடி­யாகப் பதவி விலகவேண்­டும்.

"கள்­ளச் சாரா­யம் மட்­டு­மல்­லா­மல் தமி­ழ­கத்­தில் மற்ற குற்­றச் செயல்­களும் அதி­க­ரித்­துள்ளன," என அதி­முக பிர­மு­கர்­கள் ஆர்்ப்பாட்­டத்­தின்­போது குற்­றம்­சாட்­டிப் பேசியதாகத் தமிழக ஊடகங்கள் தெரிவித்தன.