குழந்தையின் சடலத்தை 10 கி.மீ. சுமந்து சென்ற பெற்றோர்

குழந்தையின் சடலத்தை 10 கி.மீ. சுமந்து சென்ற பெற்றோர்

1 mins read
6f9b3e81-595f-471c-8e68-5565b59be29e
-

நாகை: சாலை வசதி இல்­லாத கார­ணத்­தால் ஒன்­றரை வயது குழந்­தை­யின் சட­லத்தை அதன் பெற்­றோர் சுமார் பத்து கிலோ மீட்டர் தூரம் சுமந்து சென்ற அவலம் ஊட­கங்­கள் மூலம் தெரிய ­வந்­துள்­ளது.

மேலூர் மாவட்­டத்­தில் உள்ள அல்­லேரி மலைக்­கி­ரா­மத்­துக்­குப் போது­மான சாலை வச­தி­கள் இல்லை. இந்­நி­லை­யில் அங்கு வசித்து வரும் விஜி என்ற கூலித் தொழி­லா­ளி­யின் ஒன்­றரை வயது மகள் தனுஷ்­காவை கடந்த வெள்­ளிக்­கி­ழமை பாம்பு தீண்­டி­விட்­டது.

குழந்­தை­யு­டன் அணைக்­கட்டு அரசு மருத்­து­வ­ம­னைக்குச் சென்ற­போது, சாலை வசதி இல்­லா­த­தால் மிக­வும் தாம­த­மா­னது. இத­னால் குழந்தை வரும் வழி­யிலேயே இறந்­து­விட்­ட­தாக மருத்து­வர்­கள் தெரி­வித்­த­னர்.

பின்­னர் குழந்­தை­யின் சட­லத்­து­டன் அவசர சிகிச்சை வாக­னத்­தில் ஊர் திரும்­பி­ய­போது, சாலை வசதி இல்லை என விஜி­யும் அவரது மனை­வி­யும் பாதி வழி­யில் இறக்­கி­வி­டப்­பட்­ட­னர். இத­னால் அங்­கி­ருந்து ஏறத்­தாழ பத்து கிலோ மீட்­டர் தூரத்­துக்கு குழந்­தை­யின் சட­லத்தை ஏந்­தி­ய­படி நடந்தே ஊர் திரும்பி உள்­ள­னர். இது குறித்த காணொளிப்பதிவு வெளி­யா­னதை அடுத்து சமூக ஊட­கங்­களில் புதிய விவாதம் தொடங்­கி­ உள்­ளது.