மூன்றாவது நாளாக நீடித்த சோதனை
கரூர்: வருமான வரி ஏய்ப்பு தொடர்பாகத் தமிழக
மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர்
வீடு, அலுவல கங்களில் நேற்று மூன்றாவது நாளாக சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கோவை, ஈரோடு, கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே சமயத்தில் சோதனை நடத்தினர். சென்னை, அபிராமபுரத்தில் சோதனை நடத்தப்பட்டபோது பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மூன்று நாள்கள் நீடித்த சோதனையின்போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று அதிகாரிகள்
கூறியதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
தர்மபுரியில் முதல் தாதியர் கல்லூரி
திருப்பூர்: தமிழகத்தில் 11 தாதியர் கல்லூரிகளை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளதாகச் சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு அனுமதி வழங்கியதை அடுத்து, திருப்பூர் மாவட்டத்தில் தாதியர் கல்லூரி அமைக்கப்படும் என்றும் இதற்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். மிக விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றார் அமைச்சர்.
பாஜகவின் மக்கள் சந்திப்பு இயக்கம்
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் பாஜக சார்பில்
மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற உள்ளது. அக்கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்களை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயார்படுத்துவதே இந்த இயக்கத்தின் நோக்கம் என தமிழக பாஜக நிர்வாகிள் சிலர் தெரிவித் துள்ளனர். தமிழகத்தில் வீடுதோறும் சென்று மத்திய
அரசின் சாதனைகளை விளக்கும் துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பது, தலைவர்கள் பங்கேறும் பிரமாண்ட பொதுக் கூட்டங்களை நடத்துவது எனப் பல்வேறு வகையிலும் மக்களைக் கவர வேண்டும் என பாஜக மேலிடம் தமிழக நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக ஊடகச் செய்தி கூறுகிறது. மேலும் சமூக ஊடகங்கள் மூலமாகவும் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள பாஜக இளம் பிரமுகர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.
மருத்துவக் கல்லூரிகள் விவகாரம்:
இரு வழிகளை ஆராயும் தமிழக அரசு
சென்னை: தமிழகத்தில் மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ள நிலையில், இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் இருவிதமாக
செயல்பட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. "அதன்படி, எளிதில் சரிசெய்யக்கூடிய குறைபாடுகளின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள மூன்று பிரபல
மருத்துவக் கல்லூரிகளை மூடுவது சரியல்ல.
இதுகுறித்து மத்திய மருத்துவ ஆணையத்திடம் சில விளக்கங்கள் அளிக்கப்படும்," என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

