60 வயது மாணவர்கள், 90 வயது ஆசிரியர்களின் நெகிழ வைக்கும் சந்திப்பு

60 வயது மாணவர்கள், 90 வயது ஆசிரியர்களின் நெகிழ வைக்கும் சந்திப்பு

1 mins read
8643dafa-5b3b-4184-a6da-5adce5b19a06
-

நாகை: வேதா­ரண்­யத்­தில் உள்ள அரசு ஆண்­கள் மேல்­நி­லைப் பள்ளி­யில் கடந்த 1985-87ஆம் ஆண்­டு­களில் 12ஆம் வகுப்பு படித்த மாண­வர்­கள் 36 ஆண்­டு­களுக்குப் பின் அதே பள்­ளி­யில் சந்­தித்­துக்கொண்­ட­னர் (படம்).

மாண­வர்­க­ளுக்கு இப்­போது 60 வய­தா­கும் நிலை­யில், அவர்­களுக்கு வகுப்­பெ­டுத்த ஆசி­ரி­யர்­கள் எட்டு பேருக்கு இப்­போது 90 வய­தா­கிறது. மாண­வர்­களில் பலர் இன்று மருத்­து­வர், விஞ்­ஞானி, காவல்­துறை அதி­காரி என உயர் பத­வி­களில் உள்­ள­னர்.

அண்­மைய சந்­திப்­பின்­போது ஆசி­ரி­யர்­க­ளுக்கு சால்வை அணி­வித்து மரி­யாதை செலுத்­தி­ய­துடன் சிறப்­புப் பரி­சு­களும் வழங்கி மகிழ்ந்­த­னர் 60 வய­தான மாண­வர்­கள். பின்­னர் அவர்­கள் தரை­யில் அமர்ந்து, ஆசி­ரி­யரைப் பாடம் நடத்­து­மாறு கேட்­டுக்கொண்­ட­னர். சில மாண­வர்­க­ளுக்கு வகுப்­பில் பிரம்­படி வாங்­கி­யது நினை­வுக்கு வரவே, 90 வய­தான ஆசி­ரி­யர்­களி­டம் சிறிய பிரம்பைக் கொடுத்து, மீண்­டும் செல்­ல­மாக அடிக்­கக் கேட்­டுக்கொண்­ட­னர்.

பின்­னர் மாண­வர்­களும் ஆசிரியர்­களும் இணைந்து குழு­வாகப் புகைப்­ப­டம் எடுத்­துக் கொண்­ட­னர். பின்­னர் ஆசி­ரி­யர்­களை அவ­ர­வர் வீடு­க­ளுக்கு மாண­வர்­களே தங்­கள் வாக­னங்­களில் அழைத்துச் சென்­ற­னர்.