முகவரி கேட்பதுபோல் பாலியல் தொல்லை: இளையர் கைது

முகவரி கேட்பதுபோல் பாலியல் தொல்லை: இளையர் கைது

1 mins read
ffa139ad-9e3c-41d1-89a1-7064484bf283
-

சேலம்: சாலை­யில் செல்­லும் சிறுமி­களை வழி­ம­றித்து, முக­வரி கேட்­பது­போல் நடித்து பாலி­யல் தொல்லை கொடுத்த இளை­யர் சேலத்­தில் கைதா­னர்.

சர­வ­ணன் என்ற அந்த 31 வயது ஆட­வர் மீது போக்சோ சட்டத்­தில் காவல்­து­றை­யி­னர் வழக்­குப்­ப­திவு செய்­துள்­ள­னர்.

சென்னை, சேலம் உள்­ளிட்ட பல மாவட்­டங்­களில் வலம் வந்த சர­வ­ணன், சாலை­யில் டி-சட்டை அணிந்து தனித்துச் செல்­லும் சிறு­மி­க­ளைக் கண்டதும் தனது இரு­சக்­கர வாக­னத்­தில் வேக­மா­கச் சென்று அவர்­களை அணு­கு­வார். பின்­னர் முக­வரி கேட்­ப­து­போல் பாசாங்கு செய்­த­ப­டியே சிறு­மி­களி­டம் பாலி­யல் ரீதி­யில் அத்­து­மீ­று­வார். சேலத்தைச் சேர்ந்த பல சிறு­மி­க­ளி­டம் இருந்து இது­கு­றித்து புகார்­கள் எழுந்­ததை அடுத்து, காவல்­துறை விசா­ரணை மேற்­கொண்­டது.

பல்வேறு பகு­தி­களில் நிறு­வப்­பட்­டுள்ள கண்­கா­ணிப்­புக் கரு­வி­களை ஆய்வு செய்­த­போது சரவணன் சிறுமி­க­ளி­டம் அத்­து­மீறிய காட்­சி­கள் பதி­வாகி இருந்­தன.

இதை­ய­டுத்து ஓட்­டு­ந­ரா­கப் பணி­யாற்றி வரும் அவரை காவல்­து­றை­யி­னர் கைது செய்­தனர். பகலில் ஓட்­டு­ந­ரா­க­வும் இரவு வேளை­யில் இசைக்­குழு ஒன்­றில் பாட­க­ரா­க­வும் இருந்து வந்துள்ளார் சர­வ­ணன்.

ஏற்கெனவே கடந்த 2022ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட போதிலும் பின்னர் பிணை பெற்று வந்தவர், மீண்டும் சில்மிஷத்தில் ஈடுபட்டதால் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.