ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதை அடுத்து ரசிகர்கள் பல்வேறு வகையில் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை அருகே உள்ள நீலாங்கரை கடற்பகுதியில் 12 அடி ஆழத்தில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் அரவிந்தும் அவரது நீச்சல் குழு உறுப்பினர்களும் கிரிக்கெட் விளையாடினர். அது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. படம்: ஊடகம்
நூதன முறையில் வாழ்த்து
1 mins read
-

