உரிமமுள்ள கடைகளில் மட்டுமே பீடி, சிகரெட் விற்க அனுமதி

உரிமமுள்ள கடைகளில் மட்டுமே பீடி, சிகரெட் விற்க அனுமதி

1 mins read

சென்னை: பீடி, சிக­ரெட் ஆகிய புகை­யி­லைப் பொருள்­களை விற்­பனை செய்­வ­தற்குத் தனி உரி­மம் பெறும் நடை­முறை விரை­வில் அம­லுக்கு வர­வுள்ள தாக சுகா­தா­ரத் துறை அதி காரி­கள் தெரி­வித்­துள்­ளனா்.

புதிய விதி­கள் நடை முறைக்கு வந்தபின்­னர் பெட்­டிக் கடை, தேநீா் கடைகளில் இனி­மேல் பீடி, சிக­ரெட் விற்க முடி­யாது. உரி­மம் உள்ள கடை­களில் மட்­டுமே அவற்றை விற்­பனை செய்யமுடி­யும். அந்த விதி­களை மீறி நடந்­து­கொள்­ளும் கடை­க­ளுக்­கான உரி­மத்தை ரத்து செய்­ய­வும் சட்ட நடவடிக்கை எடுக்­க­வும் விதி­முறைகள் வகுக்­கப்­பட்­டுள்­ளன.

உலக அள­வில் சீனா­வுக்கு அடுத்து இந்­தி­யா­வில்­தான் பீடி, சிக­ரெட் அதி­க­மாக உற்­பத்தி செய்­யப்­ப­டு­கின்­றன. இத­னால் இங்கு 20 கோடி பேர் புகை­யிலைப் பழக்­கத்­துக்கு அடி­மை­யாகியுள்­ள­தாக சுகா­தார ஆய்­வுத் தக­வல்­கள் கூறுகின்­றன.

இந்நிலை தொடா்ந்­தால், அடுத்த 10 ஆண்­டு­களில் நாட்­டின் மொத்த இறப்பு விகி­தத்­தில் 13 விழுக்­காடு புகை­யிலை பாதிப்பே கார­ண­மாக இருக்­கும் எனக் கணிக்­கப்­பட்­டுள்­ளது.

இதை­ய­டுத்து அதன் பயன்­பாட்­டைக் கட்­டுப்­ப­டுத்த பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மத்­திய, மாநில அர­சு­கள் முன்­னெ­டுத்து வரு­கின்­றன.